மேற்கு வங்கத்தில் சாதனை படைத்த பாஜக.. 1952க்குப் பிறகு அதிகபட்ச தொகுதிகளாக 4ல் வெற்றி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்று பாஜக புதிய சாதனை படைத்துள்ளது.
அங்கு கடந்த 1952ம் ஆண்டு பாரதிய ஜனசங்கம் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு அது அங்கு சோபிக்கவில்லை. தற்போது தான், 4 தொகுதிகளில் வெற்றி பெற்று அங்கு புதிய வரலாறு படைத்துள்ளது பாஜக.

மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவுக்கு இது நிச்சயம் சந்தோஷமான முடிவு தான். இதற்கு முன்பு பாஜகவின் முன் உருவான பாரதிய ஜனசங்கம் 1952 தேர்தலில் 9 தொகுதிகளில் வென்றதே இந்த மாநிலத்தில் பாஜகவின் பெரிய சாதனையாக இருந்தது.
தற்போது வெற்றி பெற்றுள்ள நான்கு பாஜக வேட்பாளர்களில், மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷும் ஒருவர் ஆவார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டுதான் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் கியான்சிங் சோஹன்பாலை வீழ்த்தி வென்றுள்ளார் திலீப் கோஷ்.
பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் 10 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன. இது காங்கிரஸை விட 2 சதவீதமே குறைவாகும். இருப்பினும் கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது பாஜகவுக்கு 17 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 4.1 சதவீத வாக்குகளே கிடைத்திருந்தன என்பதால் இந்த 10 சதவீதம் என்பது நிச்சயம் மிகப் பெரிய லாபம்தான்.
2006 சட்டபைத் தேர்தலை திரினமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து பாஜக சந்தித்தது. அதில் ஒரு சீட்டில் கூட அது வெல்லவில்லை. மேலும் 1.9 தவீத வாக்குகளே கிடைத்தன. 2014 இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சீட்டில் வெற்றி கிடைத்தது. தற்போது அது 4 இடங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக்












Click it and Unblock the Notifications