அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்.. வெடித்தது சர்ச்சை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை பாஜகவினர் கங்கை நீரால் சுத்தம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாக வார்த்தை யுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கன்னுஜ் லோக்சபா தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்த தொகுதியில் வரும் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் ஈடுபட்டு இருக்கிறார்.

அகிலேஷ் யாதவ் வழிபாடு: இந்த நிலையில், பிரசாரத்தை தொடங்கும் முன்பாக அகிலேஷ் யாதவ், கன்னுஜ் தொகுதியில் உள்ள சித்தாபீத் பாபா கௌரி சங்கர் மகாதேவ் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். கோயிலில் பூஜைகளையும் அகிலேஷ் யாதவ் மேற்கொண்டார். அகிலேஷ் யாதவ் பூஜை செய்யும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.
கோவிலை சுத்தம் செய்த பாஜகவினர்: அகிலேஷ் யாதவ், கோயிலில் வழிபட்டு விட்டு சென்றதும், கோயில் வளாகத்தை கங்கை நீரை கொண்டு பாஜகவினர் சுத்தம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜகவினர் கூறுகையில், "அகிலேஷ் யாதவுடன், முஸ்லீம் தலைவர்களும் கோயிலுக்கு வந்தனர்.
ஷூ அணிந்தபடியே வந்தனர்: அவர்கள் ஷூ அணிந்தபடியே கோயில் வளாகத்திற்குள் நுழைந்துவிட்டனர். எனவே தான் நாங்கள் கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்து சடங்குகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர். அதேபோல, பாஜகவை சேர்ந்த நகர தலைவரான ஷிவேந்திர குமார் குவால் கூறும் போது, 'சில முஸ்லீம்களும் அவருடன் வந்தவர்களும் கோயிலுக்குள் ஷூ அணிந்து வந்ததோடு கோயில் வளாகத்திற்குள் துப்பினர்.
அகிலேஷ் யாதவ் வருவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி கிடையாது என்று அங்கே பலகையும் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாஜகவை வெளியேற்றுவார்கள்: இதனிடையே, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஐபி சிங் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக கோயில் வளாகத்தை கங்கை நீரில் சுத்தம் செய்துள்ளது. இதற்கு முன்பாக லக்னோவில் முதல்வர் இல்லத்தை பாஜகவினர் கங்கை நீரில் கழுவினர்.
பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்களுக்கு கோயிலில் வழிபட உரிமை இல்லை என பாஜக நினைக்கிறது. ஆகவே இந்த முறை பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்கள், எளிய மக்கள் என அனைவரும் இணைந்து பாஜகவை வெளியேற்றுவார்கள்" என்று கூறினார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 3 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. தேர்தலை ஒட்டி அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தர பிரதேசத்தில் உள்ள 80 லோக்சபா தேர்தல் உள்ள நிலையில், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
தீவிர வியூகம்: இதுவரை 26 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஏனைய 54 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கும் - காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை பாஜக ஆளும் கட்சியாக உள்ளது.
இதனால், கடந்த இருமுறையை போல இந்த தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதேவேளையில், காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளும் பாஜகவை வீழ்த்த தீவிரம் காட்டி வருகின்றன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications