ம.பி. பாஜகவை ஜெயிக்க வைத்த சிவராஜ் சிங் சவுகான் நடுத்தெருவில் விரட்டியடிப்பு- முதல்வரான மோகன் யாதவ்!
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவின் முகமாக அறியப்பட்ட 3 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் கருத்து கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி பாஜக 163 இடங்களில் அபார வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 66 இடங்களில்தான் வென்றது. இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் வந்தது முதலே யார் அடுத்த முதல்வர் என்ற விவாதம் எழுந்தது. முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தமக்குதான் முதல்வர் பதவி கிடைக்கும் என உறுதியாக நம்பினார். அதைவிட தமக்குத்தான் பாஜக மேலிடம் முதல்வர் பதவியைத் தர வேன்டும் என விரும்பினார். இதனால் டெல்லி மேலிடம் அழைத்த போதும் அங்கு செல்ல மறுத்தார். அதே நேரத்தில் மத்திய பிரதேச முதல்வர் பதவிக்கு பலரும் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் போபாலில் இன்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் யாதவ், மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ்.
சிவராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 3 முறை முதல்வராக இருந்து பாஜகவின் இமாலய வெற்றிக்குக் காரணமாக இருந்த சிவராஜ் சிங் சவுகானை பாஜக மேலிடம் புறக்கணித்தது தவறு என கோபத்துடன் கொந்தளிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications