பாகிஸ்தான் தொல்லையால் குஜராத்திலும் மின்வெட்டு..உஷார் நிலையில் பாதுகாப்பு படையினர்!எல்லையில் பதற்றம்
குஜராத்: இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாள் இரவாக ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் மாநிலங்களில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா சார்பாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தக்க பதிலடி வழங்கப்பட்டது. இதை அடுத்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள வான் வழி பாதுகாப்பு தொழில்நுட்பம் காரணமாக அனைத்து குண்டுகளும் அந்திரத்திலே வழிமறிக்கப்பட்டு இந்திய ராணுவம் அழித்து வருகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை ஒட்டி காஷ்மீர் முதல் குஜராத் வரை சேர்க்கை மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜம்மு, பதான்கோட், சாம்பா, ஜெய்சால்மர், பாரமர் உள்ளிட்ட பகுதிகளில் சேர்க்கையான மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதேபோன்று குஜராத்தில் உள்ள குச் பகுதியிலும் பாதுகாப்பு காரணங்களை ஒட்டி மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக குஜராத் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், எல்லையோர பகுதியான காண்ச் மாவட்ட முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் இந்த தாக்குதல் காரணமாக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து பாகிஸ்தான் போடும் குண்டுகளை வானிலே இந்தியா அழித்து வெற்றியை கண்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications