ஆபாச இணையதளங்களுக்குத் தடை... இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி: இந்தியாவில் அனைத்து வித ஆபாச இணையதளங்களுக்கும் தடை விதிக்க செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இவற்றை யாரும் பார்க்காமல் தடுக்கும்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து இன்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேசனையும் கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சர்வதேச அளவில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற பிம்பம் உருவாகி வருகிறது.
எனவே, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக இணைய தளங்களில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

மூன்று கட்டக்களாக...
இத்திட்டத்தினை மத்திய அரசு மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதலாவதாக இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ஆபாச இணையதளங்கள் குறித்து கணக்கெடுப்பது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான ஆபாச இணையதளங்கள்.

ஆராய்ச்சி...
பின்னர், ஐஎஸ்பிக்கள் மூலம் மொத்தமாகத் தடை செய்வது. இவ்வாறு மொத்தமாக முடக்கம் செய்யும் போது அவை எதிர்காலத்தில் இணைய வேகத்தை குறைக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்வது ஆகும்.

ஆலோசனைக் கூட்டம்...
கடந்த செப்டம்பர் மாதம் தனது துறை அதிகாரிகளுடன் மத்திய சட்டம், நீதி மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

ஆபாசப்படம்...
சில நாடுகளில் ஆபாசப் படம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இந்திய கலாச்சாரத்திற்கு இது ஏற்புடையதா, சமூகத்திற்கு நன்மை பயப்பதா என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ரவிசங்கர் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவு...
கடந்த ஜூன் மாதம் இண்டர்நெட் புரொவைடர்கள் அசோசியேசன் ஆப் இந்தியா, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் ஆதரவு இல்லாமல் இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடை செய்வது சாத்தியமில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. எனவே, இது தொடர்பாக பதிலளிக்கும்படி நீதிமன்றம் தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உண்மைக் காரணம்...
இதன் காரணமாக மத்திய அரசு தற்போது இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டாலும், வளரும் இளைஞர்கள் மனதில் இத்தகைய ஆபாச இணையதளங்கள் வக்கிரமான எண்ணத்தை விதைத்து அதன் மூலம் நாட்டில் பாலியல் வன்முறைகள் பெருகுவதாக அரசு கருதுகிறது. இதனால், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கேள்விக் குறியாகும் என மத்திய அரசு அஞ்சுகிறது. அதனால் தான் இத்தகைய முடிவை அது எடுத்துள்ளது எனலாம்.

இணையதள சேவை நிறுவனங்கள்...
தற்போது இந்தியாவில் BSNL - bsnl.co.in, Tata Communications - tatacommunications.com, Tata Tele Services - tatateleservices.com, Bharti Airtel - airtel.com, MTNL - mtnl.net.in, Hathway Cable - hathway.com, You Telecom - youbroadband.in, Reliance Communications - reliancenetconnect.co.in, Sify Broadband - sify.com, Asianet Communications - asianet.co.in ஆகிய நிறுவனங்கள் இணையதள சேவையை வழங்கி வருகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications