ஹரியானாவில் மாயமான 11 வயது சிறுமி கொடூர கொலை... கூட்டு பலாத்காரம் செய்து சிதைத்த காமுக கும்பல்!

ஹரியானா மாநிலத்தில் கடந்த வாரத்தில் காணாமல் போன 11 வயது தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஹரியானாவில் 11 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை

    சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் கடந்த வாரம் காணாமல் போன 11 வயது தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மோசமான நிலையில் உடல் சிதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    ஹரியானா ஜிந்து மாவட்டத்தில் காணாமல் போனதாக கருதப்பட்ட 11 வயது தலித் சிறுமி கடந்த ஜனவரி 12 ஆம் தேதியன்று பிணமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலை பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

    "இந்த சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவில்லை. குறைந்தது 2 பேராவது கூட்டாக பலாத்காரம் செய்திருக்கவேண்டும். கடினமான பொருளை அவளது பெண்ணுறுப்புக்குள் நுழைத்துள்ளார்கள். அவளது கல்லீரல் சேதமடைந்துள்ளது" என்கிறார் உடல் பரிசோதனை செய்த டாக்டர் எஸ்.கே டாட்டர்வால்.

    காணாமல் போன தலித் சிறுமி

    காணாமல் போன தலித் சிறுமி

    குருசேத்ராவைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஜனவரி 9 ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்று குடும்பத்தார் தேடிவந்தனர். கடந்த வெள்ளிகிழமையன்று மீட்கப்பட்ட உடலில் மேலாடை மட்டும் இருந்துள்ளது. முகம், கழுத்து, உதடு, மார்பு பகுதி என சிறுமியின் உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததும் தெரியவந்துள்ளது. "காயங்களைப்பார்க்கும் போது பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தது உறுதியாகிறது" என்கிறார் அந்த மருத்துவர்.

    கூட்டு பலாத்காரம் செய்து கொலை

    கூட்டு பலாத்காரம் செய்து கொலை

    சிறுமி கொலை செய்யப்பட்டு, 3 நாட்களுக்குப்பிறகு புத்தாகேரா கிராமத்தின் கால்வாயில் போடப்பட்டிருக்கலாம் என்கிறது பிரேதப்பரிசோதனை அறிக்கை. இந்த சம்பவம் தொடர்பாக குருசேத்ரா காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை, பாலியல் வன்கொடுமை, குற்றத்திற்கான ஆதாரங்களை மறைத்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தலைமறைவான குற்றவாளிகள்

    தலைமறைவான குற்றவாளிகள்

    சம்பவம் நடந்ததிலிருந்து தலைமறைவாக இருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த தலித் சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதுவரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை.

    மகளிர் அமைப்பு போராட்டம்

    மகளிர் அமைப்பு போராட்டம்

    "சிறுமியை அடையாளம் காண அவள் அணிந்திருந்த இருந்த லாக்கெட் உதவியாக இருந்தது" என்கிறார் காவல்துறை அதிகாரி சுனீல்குமார். 250 காவலர்கள் உடல்கிடந்த பகுதியில் சோதனை நடத்தியும், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. இனிமேலும் ஒரு சிறுமிக்கு இந்தக்கொடுமை நடந்துவிடக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மகளிர் அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்திவருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+