வாடகை கேட்ட ஹவுஸ் ஓனர் மீது சாம்பார் வீச்சு.. அதே சட்டியைப் பிடுங்கி திருப்பி ஊற்றிய ஹவுஸ் ஓனர்!
பெங்களூரு: பெங்களூரில் வீட்டு வாடகையைக் கேட்ட வீட்டு உரிமையாளர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதாக பெண் உள்ளிட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சாம்பார் வீச்சில் வீட்டு உரிமையாளரும், அவரது ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். முகம் பூராவும் அவர்களுக்கு வெந்து போய் விட்டது.

பெங்களூரு ஹனமந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம். இவர் ஒரு குடியிருப்பை சொந்தமாக வைத்துள்ளார். ஏராளமான வீடுகள் அதில் உள்ளன. அதில் ஒரு பகுதியை ஹேமலதா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதை பேயிங் கெஸ்ட்டுக்காக வாடகைக்கு விட்டிருந்தார் ஹேமலதா. ஆனால் வாடகை கொடுக்காமல் சிவராமுக்கு சாக்குப் போக்கு சொல்லி வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிவராமும், அவரது கட்டடத்தில் வேலை பார்ப்பவரான சித்தராஜு என்பவரும் ஹேமலதாவிடம் போய் வாடகை கேட்டனர். அப்போது ஹேமலதாவுக்கும், வீ்ட்டு உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹேமலதாவின் 22 வயது மகன் ஷ்ரேயாஸ் கோபமடைந்து அடுப்படிக்குப் போய் அங்கு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து வந்து சிவராம் மீது ஊற்றி விட்டார்.
இதில் அவர் அலறித் துடித்தார். ஆனாலும் விடாத சிவராம் அதே சாம்பார் சட்டியைப் பிடுங்கி ஷ்ரேயாஸ் மீது வீசினார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் அலறினார். இதுகுறித்து தகவல் அறிந்தும் போலீஸார் விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹனுமந்த் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications