பிரதமர் பதவி... ராகுல் காந்தி மீது பெட் கட்டுவதை கைவிட்ட புக்கிகள்!
மும்பை: லோக்சபா தேர்தல் முடிவடையப் போகும் நிலையில் யார் அடுத்த பிரதமர் என்ற சூதாட்டமும் சூடு பிடித்துள்ளது.
அடுத்த பிரதமர் யார் என்ற சூதாட்டத்தில் இதுவரை ராகுல் காந்தியும் சூடான போட்டியில இருந்து வந்தார். தற்போது அவர் மீது பெட் கட்டுவதை புக்கிகள் நிறுத்தி வருகின்றனராம்.
ராஜ்கோட், இந்தூர், அகமதாபாத்தில் ராகுல் காந்தி மீது யாருமே இப்போது பெட் கட்டுவதில்லையாம். பிரதமர் பதவிக்கான போட்டியில் இப்போது ராகுல் காந்தி இல்லை. அவருக்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் புக்கிகள் கருதுகிறார்களாம்.

ஒரு மாதத்திற்கு முன்பு வரை
ஒரு மாதத்திற்கு முன்பு வரை கூட ராகுல் காந்தியின் பெயரை புக்கிகள் விரும்பி வந்தனர். ஆனால் தற்போது தேர்தல் முடிவடையப் போகும் நேரத்தில் புக்கிகளின் விருப்பப் பட்டியலிலிருந்து அவரை நீக்கியுள்ளனர்.

கெஜ்ரிவால் செல்வாக்கு ஓஹோ...
அதேசமயம், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து கிராக்கி நிலவுகிறது. அவரது பெயரில் ரூ. 500 முதல் ரூ. 525 வரை பெட் கட்டுகிறார்கள். ராகுலின் பெட் தொகை ரூ. 6-7 என்று அதல பாதாளத்திற்கு இறங்கி வந்து விட்டது.

முதலிடத்தில் தொடர்ந்து மோடி
பிரதமர் பதவிக்கான புக்கிகளின் பட்டியலில் மோடியே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலிடம்
அதேபோல அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற சூதாட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே கிராக்கி நிலவுகிறது. 2வது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி உள்ளது.

100க்குக் கீழ் காங். பெறும்..அதுக்கும் கிராக்கி
அதேபோல 100 சீட்களுக்கும் கீழாகவே காங்கிரஸ் பெறும் என்றும் பெருமளவிலானோர் பெட் கட்டுகிறார்களாம்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications