உச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளானவர்.... தற்காலிக சபாநாயகர் போப்பையா!
எடியூரப்பாவுக்கு ஆதரவாக செயல்பட்டு, எம்எல்ஏக்களை தகுதி நீ்க்கம் செய்ததற்காக உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்தான், கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் போப்பையா.
Recommended Video

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போப்பையா, ஏற்கனவே சபநாயகராக இருந்தபோது, எடியூரப்பாவுக்கு ஆதரவாக செயல்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளானவர்.
கர்நாடகா சட்டசபையில் எடியூரப்பா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கே.ஜி. போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபையின் மிகவும் மூத்த எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் ஆர்வி. தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஜி போப்பையாவை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் வாஜூபாய் வாலா நியமித்துள்ளார்.
தேஷ்பாண்டேவுக்கு அடுத்ததாக, பாஜகவைச் சேர்ந்த உமேஷ் விஸ்வநாத் கட்டிதான் மூத்த எம்எல்ஏ. ஆனால் அவருடைய பெயரையும் ஆளுநர் பரிசீலிக்கவில்லை. ஆளுநரின் இந்த முடிவும் சர்ச்சையாகி உள்ளது.
2008ம் ஆண்டு கர்நாடகா சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக போப்பையா நியமிக்கப்பட்டார். 2009 முதல் 2013 வரை சபாநாயகராக இருந்தார்.
2010ல், முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அப்போது சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, பாஜகவைச் சேர்ந்த 11 பேர் மற்றும் 5 சுயேச்சை எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகராக இருந்த போப்பையா.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போப்பையாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை கூறியது. அவருடைய உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் மீண்டும் தற்காலிக சபாநாயகராகி உள்ளார். நாளை என்ன செய்யப் போகிறாரோ என்ற கிலி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications