தலைமுடியை நூடுல்ஸ் ஆக சாப்பிட்ட 4 வயது சிறுவன்…: 4 அடி நீள முடி 4 ஆம் தேதி அகற்றம்!
டெல்லி: டெல்லியை சேர்ந்த 4 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து 4 அடி நீல முடியை அகற்றியுள்ளனர் மருத்துவர்கள். தனது தலைமுடியை தானே நூடுல்ஸ் போல சாப்பிட்டு வந்த அந்த சிறுவனுக்கு வயிற்று வலி அதிகரிக்கவே, அவனை ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் முடி இருந்தது தெரியவந்தது.
தலைமுடியை உண்ணும் வினோத உளவியல் நோயினால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வினோத நோய்
டெல்லியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன் ‘ரபுன்செல் சின்ட்ரோம்' என்னும் தனது தலைமுடியை தானே உண்ணும் வினோத நோய் பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளான்
வயிற்று வலி
அந்த சிறுவன் கடந்த 9 மாதமாக இவ்வாறு தலைமுடியை உண்டு வந்ததால் அவன் தீவிர வயிற்று வலியால் அவதியுற்றுள்ளான். அவனது பெற்றோருக்கு என்ன காரணத்தினால் சிறுவனுக்கு தொடர்ந்து வயிற்று வலி வருகிறது என்று புரியாததால் பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
மோசமான உடல்நிலை
தலைமுடியை சாப்பிடும் இந்த பழக்கத்தினால் தண்ணீரைத் தவிர எந்த உணவையும் சிறுவனால் ஜீரணிக்க முடியாமல் போனது. இதனால் அவனுடைய உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகியுள்ளது.
காரணம் என்ன?
இதுபற்றி அவனது தந்தை கூறுகையில், என் மகன் எந்நேரமும் வயிற்று வலியால் அழுது கொண்டே இருப்பான். நாங்கள் பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்று விட்டோம். ஆனாலும் எந்த மருத்துவர்களாலும் சரியான காரணத்தை கூற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வயிற்றில் முடி
இந்நிலையில், அவனது வயிறு அளவுக்கு அதிகமாக வீங்கி கொண்டே போனதால் பயந்து போன அவனது பெற்றோர், டெல்லியில் எய்ம்ஸ் பணிபுரியும் மருத்துவர் சில்பா சர்மாவை சந்தித்துள்ளனர்.
அந்த மருத்துவர் நடந்தது அனைத்தையும் கேட்டறிந்த பின்னர், அந்த சிறுவனது வயிற்றில் முடி இருப்பதை தெரிந்து கொண்டார்.
4 அடி நீள முடி
இதையடுத்து அந்த சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்த ஸ்கேனில் சிறுவனின் வயிற்றில் முடி அதிகளவில் சேர்ந்து உருண்டை வடிவத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுபற்றி சிறுவனது பெற்றோர் கூறுகையில், அவன் எப்போதும் தன் கையினால் முடியை இழுத்துக் கொண்டே இருப்பான். நாங்கள் அதனை விளையாட்டாக நினைத்து விட்டோம். தற்போது ஸ்கேன் முடிவுகளை பார்த்த பின்பு தான் விபரீதம் புரிந்தது என்று தெரிவித்துள்ளனர்.
4 ஆம் தேதி அகற்றம்
பின்னர் கடந்த பிப்ரவரி 4 தேதி நடந்த அறுவை சிகிச்சையில், அந்த சிறுவனின் பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் இருந்து சுமார் 4 அடி நீளமுள்ள முடியினை அகற்றியுள்ளனர்.
பெற்றோர் நிம்மதி
சிகிச்சைக்கு பின்னர் பேசிய சிறுவனின் தாயார், அவன் வயிற்றில் 4 அடிக்கு முடியிருந்ததை பார்த்தபோது அவன் உயிர் பிழைப்பதே கடினம் என்று தான் நினைத்தேன். கடவுளின் அருளால் தற்போது சிகிச்சை செய்து அந்த முடியினை மருத்துவர்கள் அகற்றியதால் நிம்மதியாக உணர்கிறேன்.
மொட்டை
மேலும் அவனை ஒவ்வொரு நிமிடமும் கவனமாக பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த சிறுவன் இனி தலைமுடியை சாப்பிடாமல் இருக்க அவனது பெற்றோர் தற்போது அந்த சிறுவனுக்கு தலையில் மொட்டை அடித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications