காதலுக்கு தண்டனை... ஹரியானாவில் காதலியைத் தூக்கிலிட்டு, காதலன் தலை துண்டித்து கொலை
சன்டிகர்: ஹரியானாவில் காதலர்களை பெண்ணின் குடும்பத்தார் கௌரவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டம் கலனவுரில் உள்ள கர்னாவதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மேந்தர்(23), நிதி(20). காதலர்களான அவர்கள் ரோதக்கில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து அவர்களை காணவில்லை. அவர்கள் ஊரை விட்டு சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பேச்சு அடிபட்டது. அவர்களின் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் நிதியின் குடும்பத்தார் நேற்று காலை அவரை தொடர்பு கொண்டு ஊருக்கு திரும்பி வருமாறு பேசியுள்ளனர். திரும்பி வந்தால் தர்மேந்தரை தாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதியும் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் நேற்று ஊருக்கு திரும்பி நிதி வீட்டுக்குச் சென்றனர்.
உடனே நிதியை அவரது குடும்பத்தார் தூக்கில் தொங்க விட்டு பிணமாக்கி அவரின் உடலை சத்தமில்லாமல் எரித்துவிட்டனர். பின்னர் தர்மேந்தரை ஊரார் முன்னிலையில் அடித்து கை, கால்களை ஒடித்து பின்னர் தலையை வெட்டிக் கொன்றனர். அவரது உடலை அவரின் வீட்டுக்கு வெளியே வீசினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கப் பஞ்சாயத்துபடி ஒரே கிராமத்தைச் சேர்ந்த, சமூகத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications