டெல்லியில் பயங்கரம்.. பிச்சை போட மறுத்த இளைஞரை பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சிறுவர்கள்!
டெல்லி: டெல்லியில் பிச்சை போட மறுத்த இளைஞரை சிறுவர்கள் இருவர் பீர்பாட்டிலால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு டெல்லியில் கோவிந்த்புரி பகுதியில் உள்ள கால்காஜி கோவிலில் பூ வியாபாரம் செய்து வந்தவர் சஞ்சய் குமார். அவரிடம் 9 மற்றும் 10 வயதுள்ள இரு சிறுவர்கள் பிச்சை கேட்டுள்ளனர்.
ஆனால் சஞ்சய் குமார் அவர்களுக்கு காசு கொடுக்க மறுத்துள்ளார். இதனால் சஞ்சய் குமாருடன் அந்த சிறுவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஒரு சிறுவனின் கன்னத்தில் சஞ்சய்குமார் அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவன் அங்கிருந்த பீர் பாட்டிலால் சஞ்சய் குமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளான்.
இதில் நிலை குலைந்து விழுந்த சஞ்சய்குமாரின் மார்பு மீறி ஏறி அமர்ந்த மற்றொரு சிறுவன் உடைந்த பீர் பாட்டிலால் அவரது கழுத்தில் சமாரியாக குத்தினான்.
இது குறித்து தகவல் அறிந்த கோவிந்த்புரி போலீசார் பாட்டிலால் குத்தப்பட்ட சஞ்சய்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சஞ்சய் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே நேரத்தில் இளைஞரை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்த பின்னர் தப்பி ஓடாமல் அதே கால்காஜி கோவில் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த சிறுவர்கள் இருவரையும் பிடித்த போலீசார் சிறுவர் கைது செய்து சீர்திருத்த மையத்தில் அடைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications