காலில் விழுடா... ஈவ் டீசிங் செய்தவனை அடித்து நொறுக்கிய உ.பி மாணவி
லக்னோ: உத்தரபிரதேசத்தில், ஈவ் டீஸிங் செய்த வாலிபரை போலீசார் முன்னிலையில் மாணவி ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்து தனது காலில் விழ செய்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார்.
அப்போது அந்த மாணவர் பலமுறை மன்னிப்பு கேட்டார்... "மன்னிப்பு கேட்பியா... மன்னிப்பு கேட்பியா... கேலி செய்துவிட்டு என்னடா மன்னிப்பு... காலில் விழு... காலில் விழு" என்று கூறி தனது ஷூவை கழற்றி அடித்தார். அப்படியும் விடாமல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி.
இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவி கூறுகையில்,பெண்கள் என்றால் எதற்கு துணிந்தவர்கள் என்பதை காட்டவே அவனை அடித்து,உதைத்து எனது காலில் விழ வைத்தேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications