போலி மார்பகப் பெருக்க கிரீம் விற்பனை.. மும்பையில் ஒருவர் கைது
மும்பை: மும்பையில் சட்டத்திற்கு புறம்பான வகையில், பிரபல நிறுவனங்களின் மார்பகப் பெருக்க கிரீம்களின் பெயரில் போலியாக விற்பனை செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு பிரபலமான கம்பெனிகளின் பெயரினை போலியாக உபயோகித்து இந்த விற்பனையை செய்தது தெரியவந்துள்ளது.
தானேவைச் சேர்ந்த நாரயண் மிரா என்கின்ற பட்டேல்தான் கைது செய்யப்பட்டவர். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரிடமிருந்து கிரீம் தயாரிப்பு இயந்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு கிட்டதட்ட 24.48 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

"போலியாக உபயோகிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றான நிறுவனம் இதுகுறித்த புகாரினை அளித்தது. தயா நகரினைச் சேர்ந்த பாட்டேல், மால்வானி பகுதியில் இந்த கிரீமினை தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. ஒரு ரூமினை வாடகைக்கு எடுத்து இந்த விற்பனையை அவர் செய்து வந்துள்ளார்" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கிரீம் விற்பனையை கடந்த இரண்டு மாதங்களாக அவர் செய்து வந்துள்ளார். மேலும், இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ள கிரீமின் அளவினையும் போலீசார் கணக்கிட்டு வருகின்றனர்.
"பட்டேல் விசாரணையில் மற்றுமொரு முக்கிய விஷயத்தினை தெரிவித்துள்ளார். அவர் மற்றொருவருக்காக வேலை செய்ததாகவும், அவரே இதற்கு முழுமுதற் காரணமென்றும் தெரிவித்தார். எனினும், எல்லா வகையிலும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றோம். " என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கிரீம் மாதிரிகளை தர ஆய்விற்காக காவல் துறையினர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications