For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்ணை காக்க வைக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கு .. அபராதம் விதிக்கும் அதிரடி கிராமம்!

Google Oneindia Tamil News

ராம்பூர், உ.பி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு வித்தியாசமான கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் பெரும்பாலும் முஸ்லீம்களே வசிக்கின்றனர். இவர்களது திருமண நடைமுறைகள் மிகவும் எளிமையாக, நாட்டுக்கே நல்லதொரு உதாரணமாக திகழ்கின்றன.

இந்தக் கிராமமானது, கிழக்கு உ.பியில் ராம்பூருக்கு அருகே உள்ளது. அந்தக் கிராமத்தின் பெயர் தெளகிபுரி. இங்கு கிட்டத்தட்ட 10,000 பேர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்தான்.

Bridegrooms Running Late Are Fined Heavily in This Uttar Pradesh Village

இந்தக் கிராமத்தில், மாப்பிள்ளை வீட்டார் நடத்தும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமானது சரியான சமயத்தில் ஆரம்பித்து வந்து விட வேண்டும். லேட்டானால் அல்லது மணப்பெண்ணை காக்க வைத்தால் அபராதம் போட்டு விடுவார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

லேட்டானால், ஒரு நிமிடத்திற்கு ரூ. 100 என்று அபராதம் தீட்டுகிறார்கள். மேலும் தெருவில் டான்ஸ் ஆடுவது, டிரம்ஸ் அடி்பது ஆகியவை கூடாது. அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும் என்பது ஊர்க் கட்டுப்பாடு ஆகும்.

மேலும் இங்குள்ளவர்கள் கிராமத்துக்குள்ளேயே திருமணம் செய்வதும் வழக்கமாக உள்ளது. இதுதான் பாதுகாப்பானது என்றும் ஊர்ப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

English summary
Baraats, or the processions, that accompany grooms are notorious for being late, and keeping the bride and her family waiting. That doesn't fly in a village in eastern Uttar Pradesh. The groom is fined if he's not punctual, and the baraat is warned that it must not be noisy. Elders in the village of Taunkpuri Tanda charge Rs. 100 for every minute that a baraat is late. The majority of the 10,000 residents are Muslim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X