துரத்தும் "அகால மரணங்கள்" அன்று பிரமோத் மகாஜன்.. இன்று மைத்துனர் கோபிநாத் முண்டே
டெல்லி: பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான பிரமோத் மகாஜன் தமது சகோதரரால் சுடப்பட்டு சிகிச்சை பெற்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அகால மரணடைந்தார். தற்போது அவரது மைத்துனர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அகால மரணமடைந்துள்ளது அவர்கள் குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பிரமோத் மகாஜன். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மகாஜன், 1996ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பின்னர் பிரதமர் வாஜ்பாயின் ஆலோசகராக இருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

குடும்ப விவகாரத்தில் சகோதரர் பிரவீன் மகாஜனால் 2006ஆம் ஆண்டு பிரமோத் மகாஜன் சுடப்பட்டார். இதைத் தொடர்ந்து 13 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார் பிரமோத் மகாஜன். ஆனால் சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட பிரமோத் மகாஜன் அகால மரணடைந்தார்.
மைத்துனர் கோபிநாத் முண்டே
பிரமோத் மகாஜனின் சகோதரி பிரண்யாவின் கணர்வதான் கோபிநாத் முண்டே. மகாராஷ்டிரா மாநில அரசியலில் கோலோச்சிக் கொண்டிருந்தவர். அம்மாநில துணை முதல்வராகவும் பதவி வகித்தவர். தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை டெல்லியில் சாலை விபத்தில் சிக்கிய கோபிநாத் முண்டே சிகிச்சைக்காக டெல்லி எய்எம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின் போது மகாஜனுக்கு ஏற்பட்டதைப் போலவே மாரடைப்பு ஏற்பட சிகிச்சை பலனின்றி கோபிநாத் முண்டே உயிரிழந்தார்.
அன்று பிரமோத் மகாஜனைப் போல அவரது மைத்துனர் கோபிநாத் முண்டேவும் அகால மரணமடைந்துள்ளது அக்குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications