"பயங்கரமா இருக்கே.." ரயிலில் சீட்டிற்கே வந்த உணவு டெலிவரி! இந்தியாவை புகழ்ந்த பிரிட்டன் யூடியூபர்
கான்பூர்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு யூடியூபர் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ளார். இங்கு ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது ஹோட்டல் உணவுகள் டெலிவரி செய்யப்படுவதைப் பார்த்து அவர் மிரண்டுவிட்டார். இது தொடர்பாக அவர் வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
வெளிநாட்டினர் சிலர் இந்தியாவை இன்னுமே ஏதோ வளர்ச்சி அடையாத நாடு என்றே நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் பல துறைகளில் இந்தியா வெளிநாட்டை விட தொழில்நுட்பத்தில் முன்னேறி இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள பலவற்றைக் கண்டு வியந்து போகிறார்கள்.

பிரிட்டன் யூடியூபர்
அப்படிதான் நம்ம ஊரில் ரயில்களில் உணவு டெலிவரி செய்யப்படுவதைப் பார்த்து பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு யூடியூபர் மிரண்டு போய் இருக்கிறார். இது தொடர்பாகத் தனது அனுபவத்தை அவர் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரயில் பயணத்திற்கு நடுவே தான் ஆர்டர் செய்த உணவு தனக்கு டெலிவரி செய்யப்படுவதைப் பார்த்து பிரிட்டிஷ் யூடியூபர் ஆச்சரியப்பட்டார். அவர் ரயில் பயணத்தை மேற்கொண்ட நிலையில், அவரது ரயில் கான்பூர் ரயில் நிலையத்தில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நின்றதாகவும் ஆனாலும் உணவு தனது கையில் வந்து சேர்ந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ரயிலில் உணவு ஆர்டர்
ஜார்ஜ் பக்லி என்ற பிரிட்டன் யூடியூபரே இதைப் பதிவிட்டுள்ளார். பிரிட்டன் இதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். உணவு ஆர்டரில் தனக்கு உதவிய சக இந்தியப் பயணிக்கு நன்றி தெரிவித்த ஜார்ஜ், தனது பயணம் இனிமையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்த அந்த வீடியோ, ரயில்களில் உணவு டெலிவரி என்பதோடு தொடங்குகிறது. அதில் ஜார்ஜ் பக்லி, "நான் இந்தியாவில் ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்தேன். எனக்கு ரயிலில் வந்து உணவு டெலிவரி செய்யப்பட்டு இருக்கிறது. அதுவும் கான்பூர் ரயில் நிலையத்தில் வெறும் 5 நிமிடம் மட்டுமே ரயில் நின்றது. ஆனால், எனக்கு உணவு வந்து சேர்ந்துவிட்டது" என்றார்.
பயங்கர ஆச்சரியம்
மேலும், அந்த வீடியோவில் அவர் உணவை எப்படி ஆர்டர் செய்தார் என்பதையும் விவரித்து இருக்கிறார். தான் சாண்ட்விச்சை ஆர்டர் செய்ததாகக் குறிப்பிட்ட அந்த நபர், தனது சக பயணி புல் மீல்ஸை ஆர்டர் செய்ததாகவும் இருப்பினும், ஒரு துளி கூட உணவு வீணாகாதபடி பக்காவாக பேக் செய்யப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு வியந்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். எனக்கு இதுபோலத் தான் ஒருமுறை பீட்சா ரயில் சீட்டில் டெலிவரி செய்யப்பட்டது எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவர், "இந்தத் திட்டம் நிச்சயம் பிரிட்டனில் ஒர்க் அவுட் ஆகாது. ரயில் தாமதம், ரத்து என அடிக்கடி நடப்பதால்.. பிரிட்டனில் இது இருந்தால் உணவு நிறுவனம் நிச்சயம் திவால் ஆகிவிடும் எனப் பதிவிட்டுள்ளார்.
ரயிலில் உணவு புக் செய்வது எப்படி
நம் ஊரில் ரயில்களில் உணவு ஆர்டர் செய்வது ரொம்பவே ஈஸி. இதற்காக ரயில்வே துறை சார்பில் புட் ஆன் டிராக் என்ற செயலி இருக்கிறது. இது தவிரத் தனியார் செயலிகள் மூலமாகவும் உணவை ஆர்டர் செய்யலாம். செயலியின் உள்ளே நமது ரயில் டிக்கெட்டில் உள்ள பிஎன்ஆர் நம்பரை பதிவிட்டாலே போதும். சீட் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தானாக வந்துவிடும்.
அதன் பிறகு அருகே இருக்கும் உணவகங்களை செலக்ட் செய்து பே செய்யலாம். அதேநேரம் எந்த ரயில் நிலையத்தில் உங்களுக்கு உணவு வேண்டுமோ.. அங்கு செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு உணவை ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications