இங்கே நாம் வீண் விவாதங்களில் ஈடுபட்டிருக்கும்போது.. அங்கே யோகி ஆதித்யநாத்தின் தம்பி சீன எல்லையில்!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியாநாத்தின் உடன்பிறந்த சகோதரர் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருகிறார்.
டெல்லி: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியாநாத்தின் சகோதரர் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். சீன எல்லையில் ராணுவ வீரராக இருக்கும் இவரது பெயர் சுபேந்தர் சைலேந்தர் மோகன் என்பதாகும். இவர் யோகி ஆதித்தியாநாத்தின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
உத்தரபிரதேசத்தின் முதல்வராக சில மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார் யோகி ஆதித்தியாநாத். யாரும் எதிர் பார்க்காத வகையில் இவர் திடீர் என்று பதவி ஏற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் சகோதரரின் வேலை இந்திய மக்களை இன்னமும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

யோகி ஆதித்தியாநாத்தின் சகோதரர் சுபேந்தர் சைலேந்தர் மோகன் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் யோகி ஆதித்யாநாத்தின் உடன்பிறந்த சகோதரர் ஆவார். இந்த விஷயம் தற்போது வெளியே தெரிந்துள்ளதை அடுத்து அவர் நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆகியிருக்கிறார்.
இந்திய- சீன எல்லையில் பணியில் இருந்த சுபேந்தர் சைலேந்தர் மோகனை வரிசையாக நிறைய பேர் பேட்டி எடுத்து வருகின்றனர். அதன்படி சுபேந்தர் சைலேந்தர் மோகன் பேட்டிகளில் கூறியதாவது "இந்திய-சீன எல்லையில் தான் நான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றேன். எனக்கு இதுதான் வீடு இதை நான் பாதுகாப்பேன். என்னுடைய சகோதரர் யோகி ஆதித்யாநாத் நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். அதே போல் நானும் சேவை செய்து வருகிறேன்." என்று கூறியிருக்கிறார்.
மேலும் யோகி குறித்த கேள்விகளுக்கு அவர் கூறியதாவது "யோகி ஆதித்யாநாத்தை முதல்வர் ஆன பின் ஒரே ஒரு முறைதான் டெல்லியில் பார்த்தேன். அவர் என்னிடம் நாட்டிற்கு உன்னால் முடிந்த சேவையை செய் என்று கூறியிருக்கிறார். அதைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன். ஒரு ராணுவ வீரனாக இருப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications