தங்கையின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூர அண்ணன்கள்
பரேலி: உத்தர பிரதேசத்தில் உறவினர் ஒருவரை காதலித்த 17 வயது தங்கையின் தலையை துண்டித்த சகோதரர்கள் அதை எடுத்துக் கொண்டு ஊர் முழுவதும் ஊர்வலம் சென்றுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள பாமனி சவ்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களான குல் ஹஸன்(25), நான்ஹி மியான்(20). அவர்களின் தங்கை ஃபூல் ஜஹான்(17) உறவினர் முகமது அச்சானை காதலித்து வந்துள்ளார்.

முகமதை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக ஜஹானுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபம் அடைந்த ஜஹான் வீட்டை விட்டு வெளியேறி முகமதுவின் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் முகமதுவின் வீட்டிற்கு சென்று ஜஹானை அடித்து, கத்தியால் குத்தி பின்னர் அவரின் தலையை துண்டித்தனர்.
பிறகு அவர்கள் துண்டிக்கப்பட்ட தலையுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்றுள்ளனர். யார் காதலித்தாலும் இந்த கதி தான். இந்த காரியத்தை செய்ததற்காக நாங்கள் வருத்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்னர். சகோதரர்கள் ஊரை விட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications