அப்பாவி மக்கள் 8 பேர் கொலை: 14 பாக். ராணுவ முகாம்களை அழித்து பாடம் கற்பித்த பி.எஸ்.எப்.
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் காஷ்மீர் எல்லையில் வசித்து வந்த 8 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகளை அழித்துள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோட்டுப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று எல்லையோரம் உள்ள சம்பா, ரஜோரி, ஜம்மு, பூஞ்ச், ராம்கர், நவ்ஷேரா, பாலகோட் பகுதிகளை நோக்கி எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
ஜம்முவில் உள்ள ராம்கர் மற்றும் அர்னியா செக்டர்கள் அருகே சர்வதேச எல்லையையொட்டி இருந்த பாகிஸ்தான் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications