ராத்திரி 9 மணியில் இருந்து விடிய விடிய இலவசமா பேசலாம்.. பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்
டெல்லி: விடிய விடிய பேசினாலும், இலவசம்தான் என்ற ஆஃபரை அள்ளிக் கொடுத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் லேண்ட் லைனில் இருந்து வேறு எந்த ஒரு லேண்ட் லைன் அல்லது செல்போன்களுக்கும் இரவு 9 மணி முதல் காலை 7 மணிவரை இலவசமாக பேசிக்கொள்ளலாம்.

இந்த ஆஃபர் மே 1ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இலவச அழைப்புகளுக்கு கட்டுப்பாடு கிடையாது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது. நகரம், கிராமம், பிராட்பேண்ட் வசதி கொண்ட லேண்ட்லைன் என அனைத்து வகை பிஎஸ்என்எல் லேண்ட் லைன்களுக்கும் இந்த ஆஃபர் பொருந்தும்.
லேண்ட்லைன் மார்க்கெட்டில், ஏர்டெல் மிக வேகமாக முன்னேறி வருவதாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் தனது பழைய வாடிக்கையாளர்கள் பலத்துடன், இந்திய லேண்ட்லைன் மார்க்கெட்டில், பிஎஸ்என்எல் 62.26 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் மட்டும் பிஎஸ்என்எல் 162556 லட்சம் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களை இழந்தது. தற்போது அதன் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களாக நாடு முழுவதும் 1.66 கோடி பேர் உள்ளனர். இவர்களை தக்க வைக்க பிஎஸ்என்எல் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications