பாட்னாவில் எதிர்க்கட்சிகள் சங்கமம் : முதுகில் குத்துற அரசியல் போதும்... மாயாவதி சரமாரி விமர்சனம்!
லக்னோ: பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி அழைக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் சங்கமத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் மாயாவதி.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இம்முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இதன் முதல் கட்டமாக் பீகார் தலைநகர் பாட்னாவில் நாளை காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பாட்னாவில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னா புறப்பட்டு சென்றுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாட்னாவில் முகாமிட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை அழைப்பது தொடர்பாக இருவேறு கருத்துகள் தொடர்ந்து இருந்தன.
இந்நிலையில் பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை விமர்சித்து மாயாவதி தமது சமூக வலைதளப் பக்கங்களில் எழுதி இருப்பதாவது: லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலத்தின் 80 தொகுதிகள் மிக முக்கியமானவை. லோக்சபா தேர்தலின் போது எதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பது அவசியமானது. ஆனால் பாட்னாவில் கூடும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை அப்படியானதாக இருப்பதாக தெரியவில்லை. பாட்னாவில் கூடுகிற எதிர்க்கட்சிகள் பொதுவாக மக்களிடம் எப்படியான நம்பிக்கையை ஏற்படுத்துகிறோம் என்பதை விளக்கவும் இல்லை. நேருக்கு நேர் புகழ்வது, முதுகில் குத்துவது என்கிற அரசியல் எத்தனை காலம் தொடரப் போகிறது? இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications