பட்ஜெட் 2022: இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் என்ன? ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் நிலை என்ன?
பல்லாயிரம் கோடிகளில் புரளும் இந்திய கிரிப்டோ சந்தை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும் என கிரிப்டோ ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதே சமயம், கிரிப்டோவை அனுமதித்தால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் உறையச் செய்துவிடும் என்கிறது மற்றொரு தரப்பு.
கிரிப்டோவை அனுமதிக்க வேண்டாம் என குரல்கள் வலுத்து வரும் அதே சமயம், அதை அனுமதித்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விஷயத்தில் குறைந்தபட்சம் அது குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர் கிரிப்டோ கரன்சியை எதிர்ப்பவர்கள்.
உலக பொருளாதாரத்தில் ஒரு சொத்தின் விலை, அதன் மதிப்பு அல்லது உத்தரவாதத்தை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, ரியல் எஸ்டேட்டை எடுத்துக் கொண்டால் அதன் நிலம் மற்றும் வீட்டின் மதிப்பைக் கொண்டு அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்திய ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டால், "I PROMISE TO PAY THE BEARER THE SUM OF ..... RUPEES" என்கிற இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் கொடுக்கும் உத்தரவாதத்தினால் அச்சடிக்கப்படும் மதிப்புக்கான விலையைப் பெறுகிறது. கிரிப்டோ கரன்சிக்கு அப்படி ஒரு மதிப்போ, எந்தவொரு அரசு அல்லது உலகின் முக்கிய அமைப்புகளின் உத்தரவாதமோ இல்லை. இருந்தாலும், அது ஒரு புதுவித சொத்தாக அல்லது பணமாக கருதப்படுகிறது. இது தான் பிரச்னையின் தொடக்கப் புள்ளியாக அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளால் பார்க்கப்படுகிறது.
இந்தியா உட்பட மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திலிருந்து, 2020ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021ஆம் ஆண்டு ஜூன் வரையான காலகட்டத்தில், 42,35,000 கோடி ரூபாய் (572.5 பில்லியன் அமெரிக்க டாலர்), கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக செயினாலிசிஸ் அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளது புளூம்பெர்க்.
இது ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டில் வெறும் 14 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரிப்டோகரன்சி என்றால் என்ன, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக என்ன மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது- - BBC News தமிழ்
- கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் இந்தியா, 2021 - 22 நிதியாண்டில் அறிவித்த ஒட்டுமொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? 34,83,236 கோடி ரூபாய்தான்.
அதே (ஜூலை 2020 முதல் ஜூன் 2021) காலகட்டத்தில், இந்தியாவில் கிரிப்டோ சந்தை 641 சதவீதம் அதிகரித்திருப்பதாக செயினாலிசிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 லட்சம் (8 மில்லியன்) பேர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.
பிட்பின்ஸ் (Bitbns) என்கிற கிரிப்டோ தளத்தில் பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றும் முதலீடு செய்யப்படும் பணத்தின் அளவு கடந்த ஆண்டை விட 2021ஆம் ஆண்டில் 30 மடங்கு அதிகரித்திருப்பதாக ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெளரவ் தஹக்.
மற்ற சில கிரிப்டோ நிறுவனங்களும் தங்களின் வியாபாரம் அதிகரித்திருப்பதை, பல்வேறு செய்திகளில் ஆமோதித்துள்ளனர்.
இப்படி ஒரு பக்கம் கிரிப்டோ கரன்சி சந்தை அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் இந்திய அரசு தரப்பிலிருந்து, கிரிப்டோ கரன்சி மீது எந்த வித தடையும் இல்லாத, எந்த வித கட்டுப்பாடுகளோ நெறிமுறைகளோ இல்லாத, அரசு எந்திரத்துக்குள்ளேயே ஒருவித எதிர்ப்பு மனநிலை என, தெளிவற்ற நிலையே தொடர்கிறது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி
இந்திய வங்கித் துறையை நிர்வகிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி, 2013 கால கட்டத்திலேயே கிரிப்டோகரன்சி என ஒன்று இருப்பதாகவும், அதில் உள்ள சட்ட சிக்கல்கள் மற்றும் அபாயங்களை இந்தியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்தது. அப்போதிலிருந்து இந்த நொடிவரை ஆர்பிஐ கிரிப்டோ கரன்சிக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கிறது.
சமீபத்தில் கூட, கிரிப்டோ கரன்சிக்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என ஆர்பிஐ தன் மத்திய குழுவிடம் தன் தரப்பை வலுவாகத் தெளிவுபடுத்தியுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
"கிரிப்டோ கரன்சிகள், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மைப் பார்வையில் பார்க்கும் போது, ஆர்பிஐக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது" என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் பேசியதை சுட்டிக்காட்டுகிறது எகனாமிக் டைம்ச் பத்திரிகை.
2018ஆம் ஆண்டு, வங்கிகள் கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கக்கூடாது, அது போன்ற சொத்துக்களில் முதலீடு செய்திருந்தால் அதை விற்று உடனடியாக வெளியேற வேண்டும் என தடை விதித்தது ஆர்பிஐ. அத்தடையை இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 2020-ல் நீக்கியது.
கிரிப்டோ கரன்சிகள் அதீதமாக விலை மாறக்கூடியதன்மை கொண்டவை. வங்கி அமைப்புகளின் முக்கியத்துவத்தை கிரிப்டோ கரன்சிகள் குறைத்துவிடும் என்றும், ஒட்டுமொத்தத்தில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் என்பதால்தான் மத்திய ரிசர்வ் வங்கி போன்ற பல நாட்டு மத்திய வங்கிகள் அதைத் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அஞ்சுகின்றன என சமீபத்தில் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான மற்றொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்திய அரசு முதலில் கிரிப்டோ கரன்சியை முழுமையாகத் தடை செய்வது போலத் தெரிந்தது, ஆனால் தற்போது கிரிப்டோ கரன்சியை நெறிமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா வரைவுச்சட்ட மசோதாவை உருவாக்கி வருதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி நெறிமுறைப்படுத்தப்படும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.
எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என கிரிப்டோ முதலீட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
"$500 மில்லியன் முதலீடு"
"2020ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம், இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகத்தின் மீதான தடைய நீக்கியதால் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கிரிப்டோவில் முதலீடு செய்வதற்கான தடைகள் நீங்கின.
உலகின் முன்னணி வெஞ்சர் முதலீட்டாளர்களான ஆண்ட்ரெஸ்ஸன் ஹொரொவிட்ஸ், சிகுயா கேப்பிட்டல், டைகர் குளோபல் போன்ற நிறுவனங்கள் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் கிரிப்டோ ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. இந்த தொகையே, கிரிப்டோகரன்சி குறித்த உற்சாகத்தையும், கிரிப்டோவினால் கிடைக்கும் நன்மை குறித்த விழிப்புணர்வையும், அதிக ரிஸ்கில் அதிக லாபம் கொடுக்கும் சொத்தில் சோதனை செய்து பார்க்க விரும்புவதையும் வெளிப்படுத்துகிறது" என்கிறார் காயின் ஸ்விட்ச் என்கிற கிரிப்டோ கரன்சி தளத்தின் முதன்மை வணிக அதிகாரி ஷரண் நாயர்.
மேலும், "ஒரு முற்போக்கான நெறிமுறைச் சட்டம், வளமான சூழல் அமைப்புகளை உருவாக்கும், அது மேற்கொண்ட பல இந்தியர்கள் பாதுகாப்பான சூழலில் கிரிப்டோவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும்" என்கிறார்.
"முதலில், கிரிப்டோவை ஒரு சொத்தாக வகைப்படுத்த வேண்டும், கிரிப்டோவில் முதலீடு செய்யப்படும் பணத்தின் நகர்வுக்கென (பணம் எப்படி ஒரு நபரிடமிருந்து கிரிப்டோவுக்கும், பிறகு கிரிப்டொவில் இருந்து தனி நபர் கைக்குச் செல்கிறது) முறையான சட்ட வரையறை இருக்க வேண்டும். ஒட்டுமொத்த கிரிப்டோ துறைக்குமே கடுமையான கே.ஒய்.சி (முதலீட்டாளர்கள் யார் என்கிற அடிப்படை விவரங்கள்) நடைமுறைகள் தேவை. கடைசியாக, கிரிப்டோ துறை எந்த அமைப்பின் கீழ் வணிக ரீதியில் செயல்பட வேண்டும் போன்றவைகளை எல்லாம் தீர்மானித்து குறிப்பிடப்பட வேண்டும்" என்கிறார் ஷரண் நாயர்.
கிரிப்டோவை நெறிமுறைப்படுத்த சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் இருந்தால் போதும் என்பதை, எதிர் தரப்பினர் கடுமையாக எதிர்க்கின்றனர்.
கிரிப்டோவை ஒருமுறை உள்ளே அனுமதித்துவிட்டால், அது பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிடும் என்பது அவர்களின் வாதம்.
பொதுவாக ஒரு கரன்சியை ஏதாவது ஒரு நாடு அச்சடித்தால்தான் அதை கரன்சி என்போம், நாடுகளைத் தவிர வேறு யாராவது கையாண்டால் அது 'சொத்து' என்று தான் அழைக்கப்படுகிறது.
கரன்சியை அச்சடித்து வெளியிடுவது தான் ஒரு அரசாங்கம், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த கையில் வைத்திருக்கும் மிகப்பெரிய நெறிமுறை ஆயுதம். அதையே கிரிப்டோகரன்சி கேள்விக்கு உள்ளாக்கிவிடுவதால் அரசாங்கங்கங்களும் அதை சட்ட ரீதியில் அங்கீகரிக்க அஞ்சுவதாக தமிழ்நாட்டின் நிதிசார் உயர்மட்டக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கூறினார்.
"உதாரணமாக டாலரில் முதலீடு செய்தால், அதை அச்சடித்தது அமெரிக்கா என்று தெரியும். ஆனால் கிரிப்டோவில் அதை யார் உருவாக்கினார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அமெரிக்க டாலரில் ஒரு பிரச்சனை என்றால் அதை ஃபெடரல் ரிசர்விடம் பேசலாம். கிரிப்டோவில் ஒரு பிரச்னை என்றால் யாரைத் தொடர்பு கொள்வது?
அதே போல ஒரு நாட்டின் மத்திய வங்கி, அந்த நாட்டின் கரன்சியின் விநியோகம் தொடர்பான விவரங்களை வெளிப்படையாகச் செய்யும். உதாரணமாக வட்டி விகிதத்தை உயர்த்துகிறார்கள் என்றால், பணத்தின் சப்ளையை குறைக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக புரிந்து கொள்ளலாம். ஆனால் கிரிப்டோவில் இப்படி ஒரு விஷயமே இல்லையே.
கிரிப்டோ விநியோகத்தை யாராலும் கணிக்க முடியாது எனும் போது, அதை எப்படி நம்பி பொருளாதாரத்துக்குள் அனுமதிக்க முடியும், கிரிப்டோவை எப்படி வங்கித் துறைக்குள் கொண்டு வர முடியும்" என கேள்வி எழுப்புகிறார் அந்த மூத்த உறுப்பினர்.
- கஜகஸ்தானில் கலவரம் நடந்தால் உலகெங்கும் பிட்காயின் மதிப்பு சரிவது ஏன்?
- திருடிய பணத்தில் 2,000 கோடி ரூபாயை திருப்பி தந்த கிரிப்டோகரன்சி ஹேக்கர் - ஏன்?
"வங்கிகளைப் பொருத்தவரை ஒரளவுக்கு நிலையான சொத்துக்களுக்கு எதிராகத் தான் கடன் கொடுத்து தங்களின் வங்கி வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்லும். கிரிப்டோ போன்ற அதீத விலை மாற்றம் காணும் கரன்சிகளை வங்கித் துறைக்குள் அனுமதிப்பது, வங்கித் துறையையே சிரமத்துக்கு உள்ளாக்கிவிடும்.
ஆர்பிஐயைப் பொறுத்தவரை கிரிப்டோ கரன்சிகளை ஒரு சொத்தாகக் கூட அனுமதிக்கப்படக் கூடாது, என்று கருதுவதாகத் தெரிகிறது. அப்படி வெறும் சொத்தாக தற்போது வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டால், நாளை அது பணப்பரிமாற்றமாக மாறிவிடும். அப்படி அது பரிணமித்துவிட்டால், பிறகு அப்பரிமாற்றங்களை கட்டுப்படுத்த முடியாது என உறுதியாகக் கருதுகிறது.
இப்பணப்பரிமாற்றம் காலப்போக்கில் அதிகரித்தால், ஒருகட்டத்தில் பொருட்களின் விலையில் இருக்கும் வெளிப்படைத்தன்மை காணாமல் போய்விடும். ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்துவிடும்" என அந்த உறுப்பினர் பகிர்ந்து கொண்டார்.
'படித்தவர்களுக்கே புரியவில்லையே - ரிஸ்க் தான்'
"உலகின் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவில் கிரிப்டோ கொண்டு வரப்பட்டால், அது ஒரு சூதாட்டம் போலத் தான் கையாளப்படும். நன்கு படித்தவர்கள், பட்டதாரிகளுக்கு கூட கிரிப்டோ குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை." என்கிறார் ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறைப் பேராசிரியர் ம மதிவாணன்.
"காலத்தின் கட்டாயத்தால் கிரிப்டோ கரன்சியை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும், அதைத் தவிர்க்க முடியாது என்றாலும், அதனால் இந்தியாவில் 5 - 10 சதவீத மக்கள் மட்டுமே பலனடைவர். ஆனால் 90% பேர் பாதிக்கப்படலாம். உதாரணமாக வங்கி பெயரில் நடக்கும் போலி அழைப்புகள் மற்றும் மோசடி முயற்சிகளைக் குறிப்பிடலாம். இன்று வரை வங்கி விஷயத்தில் எளிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
யார்? என்ன? ஏது என்றெல்லாம் சரியாக விசாரிக்காமல், மிக எளிதில் தங்களின் கே.ஒய்.சி விவரங்களைக் கூட மோசடிக்காரர்களிடம் கொடுத்துவிடும் விழிப்புணர்வற்ற நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனும் போது, கிரிப்டோ போன்ற அதிநவீன நிதி முதலீடுகள், அதுவும் பயங்கரமாக விலை மாற்றம் காணும் முதலீடுகள் பற்றி எப்படி சாதாரண மக்களுக்குத் தெரியும்?
பங்குச் சந்தை, ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன் பன்ற நிதி சார் முதலீடு சாதனங்கள் கடந்த பல ஆண்டு காலமாக இந்தியாவில் நெறிமுறைப்படுத்தப்பட்டு, முறையாக கண்காணிக்கப்பட்டு வரும் விஷயங்களைக் குறித்தே போதிய அளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாதபோது கிரிப்டோ கரன்சியை மக்கள் எப்படி புரிந்து கொண்டு செயல்படுவார்கள்," என கேள்வி எழுப்புகிறார்.
"என்னைப் பொருத்தவரை தடை இருந்தால் நல்லது, ஆனால் அதைத் தாண்டி, இந்தியா மட்டும் உலக அரங்கில் தனித்துவிடப்படாமல் இருக்க வேண்டும் என்கிற காரணத்துக்காக கிரிப்டோ கரன்சி அனுமதிக்கப்பட்டால், அது குறித்து போதிய அறிவு பரவல்படுத்தப்பட வேண்டும்," என்கிறார் மதிவாணன்.
பிற செய்திகள்:
- அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்
- ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் வட இந்திய மாணவர்களின் கோபம் ஏன்?
- உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடக்கும்
- பத்ம விருதுகளை நிராகரித்த புத்ததேவ், சந்தியா - என்ன பின்னணி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க

















Click it and Unblock the Notifications