தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. ராஜ்யசபா நாள் முழுக்க ஒத்திவைப்பு.. லோக்சபா 6 மணிக்கு கூடுகிறது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் 8ஆம் நாள் இன்று கூடிய நிலையில், இன்றும் அவை நடவடிக்கை முடங்கியது. கடந்த ஒரு வாரமாகவே ராகுல் காந்தி லண்டன் பேச்சு, அதானி விவகாரங்கள் காரணமாக அவை முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.21ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற தொடர் தொடங்கிய நிலையில், முதலில் பொருளாதார ஆய்வறிக்கையும் அதன் பிறகு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இப்போது இரண்டு அமர்வுகளாக நடந்து வருகிறது. முதல் அமர்வு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் அமர்வு கடந்த வாரம் தொடங்கியது.

 நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

அவை தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அவை நடவடிக்கைகள் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டும் தொடர்ந்து முடங்கியே வருகிறது. இதனால் திட்டமிடப்பட்டிருந்த வகையில் பட்ஜெட் மீதான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பு அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

 அதானி விவகாரம்

அதானி விவகாரம்

அதானி நிறுவனங்கள் பெற்ற கடன்கள் தொடர்பாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பரபரப்பைக் கிளப்பியிருந்தது. எனவே, இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், தற்போது உள்ள விதிகளைச் சுட்டிக் காட்டி தனியார் நிறுவனம் பெற்ற கடன் விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிவிட்டார். இருப்பினும், இதை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

 ராகுல் பேச்சு

ராகுல் பேச்சு

எதிர்க்கட்சிகளுக்கு அதானி விவகாரம் என்றால் ஆளும் தரப்பு ராகுல் காந்தியின் லண்டன் பேச்சைக் கையில் எடுத்துள்ளனர். பாரத் ஜாடோ யாத்திரையை முடித்துவிட்டு இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்தியாவில் இப்போது இருக்கும் அரசியல் சூழல் குறித்துப் பேசியிருந்தார், வெளிநாட்டில் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது என்று பாஜக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்றம் இன்று

நாடாளுமன்றம் இன்று

தனது பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் தனக்குப் பேச வாய்ப்பளித்தால் விளக்கத் தயாராக உள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அதேநேரம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை அவரை பேச அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் பாஜக, அவரை இடைநீக்கம் செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. இந்த விஷயங்களுக்காக இரு தரப்பும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டுள்ளதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இன்று 8ஆவது நாளாக அவை கூடிய நிலையில், அவை தொடங்கியவுடன் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இரு அவைகளும் முதலில் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடிய போது, இரு அவைகளிலும் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து ராஜ்யசா சபா நாள் முழுக்க ஒத்திவைத்து, ராஜ்யசபா மீண்டும் மாலை 6 மணிக்குக் கூடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+