ஆந்திராவில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 8 பேர் பலியான பரிதாபம்
ஆந்திரவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத்: ஆந்திராவில் ஆற்றில் கவிழ்ந்து சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புவனேஷ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத்துக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஒடிசாவில் இருந்து 1000 கிலோ மீட்டரை கடந்த அந்த பேருந்து விஜயவாடாவில் சிறிது நேரம் நிற்க வேண்டும்.

ஆனால் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தமால் சென்றுள்ளார். காலை 5.30 மணிக்கு விஜயவாடா அருகே மல்லபாடு என்ற இடத்தில் பாலத்தின் மீது சென்றபோது தடுப்புச்சுவர் மீது மோதிய பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அப்பகுதி மக்கள் துனையுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 8 பேரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் நந்திகமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications