தறிகெட்டு ஓடிய பேருந்து.. பிளாட்பார்மில் ஏறியதில் கண்டக்டர் உள்பட 3 பேர் பலி.. விஜயவாடாவில் சோகம்
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பண்டிட் நேரு பேருந்து நிலையத்தில் பிளாட்பார்ம் மீது பேருந்து நிலைத்தடுமாறி ஏறி இறங்கியதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ளது பண்டிட் நேரு பேருந்து நிலையம். விஜயவாடாவிலிருந்து குண்டூர் நோக்கி செல்லும் பேருந்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து அந்த பேருந்து புறப்படும் நேரம் 8.30 மணி வந்தவுடன் டிரைவர் வாகனத்தை இயக்க முயற்சித்தார்.

அப்போது திடீரென பேருந்தில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து 12 ஆவது பிளாட்பார்மில் மோதியது. இந்த விபத்தில் பேருந்து நடத்துநர், சிறிய குழந்தை, பெண் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் டிரைவர் பிளாட்பார்மில் இருந்து புறப்பட ரிவர்ஸ் எடுப்பதற்கு பதில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விட்டார். இதனால் பிரேக் பிடிக்காமல் போய்விட்டதை அடுத்து வாகனம் நிலைத்தடுமாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளாட்பார்மில் பயணிகள் அமரும் இருக்கைகள் சேதமடைந்துள்ளன.
விஜயவாடா பேருந்து நிலையம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய பேருந்து நிலையம் ஆகும். அதிலும் இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் விஜயவாடாவிலிருந்து குண்டூருக்கு செல்லும் பேருந்து முக்கியமானது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications