ஆந்திரா ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
ஹைதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி எதிர்க்கட்சிகள் நடந்த பந்த்தால் அம்மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் இன்று போக்குவரத்து சீரடைந்தது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்ட நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை வலியுறுத்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு ஆகிய எதிர்க்கட்சிகள், நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன.
அதன்படி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சென்னை கோயம்பேட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி, ஸ்ரீகாள்கஸ்தி, நெல்லூர், ஸ்ரீஹரிகோட்டா, தடா மற்றும் சூளூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி தமிழக- ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம் பாக்கத்திலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் பயணிகளை ஆரம்பாக்கத்தில் இறக்கி விட்டு தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் மீண்டும் சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் இன்று போக்குவரத்து சீரடைந்தது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications