ராகுல் இல்லாமல் காங். வெற்றி, மோடி இல்லாமல் பாஜகவுக்கு தோல்வி! இடைத் தேர்தல் முடிவு சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த 10 மாநில இடைத்தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சி தலைவர் அமித்ஷாவும் பிரச்சாரம் செய்யாமல் பாஜக பெரும்பான்மையான இடங்களில் தோற்றது என்றால், ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு செல்லாததால் காங்கிரஸ் கணிசமாக வெற்றி பெற்றது என்கின்றனர் அக்கட்சியினர்.

ராகுல் மாஜிக் பலிக்கவில்லை

ராகுல் மாஜிக் பலிக்கவில்லை

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் 'படை தளபதியாக' கம்பு சுற்றியவர் ராகுல்காந்தி. குடிசை பகுதிக்கு சென்று கூழ் குடிப்பது, 'இன்னும் மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்களே.. ஐயஹோ' என்று பஞ்ச் பேசுவது என என்னென்னம்மோ செய்து பார்த்தார் ராகுல்காந்தி. ம்ஹூம்.. எவ்ளோ முக்கினாலும், கடைசியில் நாடு முழுவதும் நாற்பத்தி நாலு சீட்டுகள்தான் காங்கிரசுக்கு கிடைத்தன.

அட.. காங்கிரசுக்கு வெற்றி!

அட.. காங்கிரசுக்கு வெற்றி!

தேர்தல் ரிசல்ட் வெளியே வந்துகொண்டிருந்த நேரத்திலேயே, 'ராகுல்காந்தி ஒழிக' என்ற கோஷம் காங்கிரசுக்குள் இருந்து கேட்க தொடங்கியது. முக்கிய தலைவர்கள் எல்லோரும் ராகுல் காந்தியின் பிரச்சார யுக்தியை கேலி செய்து தலைமையின் கோபத்திற்கு ஆளாக தொடங்கினர். இந்நிலையில்தான் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக (காங்கிரசே கூட) காங்கிரஸ் கட்சி கணிசமாக வெற்றி பெற்றுள்ளது.

பிரச்சாரம் செய்யாமல் வெற்றி

பிரச்சாரம் செய்யாமல் வெற்றி

உத்தரப் பிரதேசத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. குஜராத்தில் 6 பேரவைத் தொகுதிகளில் பாஜக வென்றது, 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. நாடாளுமன்றத் தொகுதி மூன்றில் வடோதரா தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆனால், குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக சட்டப் பேரவை இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. மாறாக சென்ற தேர்தலில் தோல்வி முகம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளன. ராகுல்காந்தியோ, சோனியாவோ பிரச்சாரம் செய்யாத நிலையில் காங்கிரசுக்கு வெற்றி என்ற சுவாச காற்று கிடைத்துள்ளது.

பாஜகவுக்கு அதிர்ச்சி

பாஜகவுக்கு அதிர்ச்சி

அதே நேரம் அமோக வெற்றியுடன் மத்தியில் ஆட்சியமைத்த பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நரேந்திரமோடியும், அமித் ஷாவும் இந்த இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்யவில்லை என்பது இதற்கு முக்கிய காரணம். இவ்விருவரையும் நம்பிதான் பாஜக உள்ளது அல்லது அப்படி மாற்றப்பட்டுவிட்டது என்பது இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சொல்லும் பாடம். ஆனால் இதனால் பாஜகவுக்கு பெரிய இழப்பு ஒன்றும் கிடையாது. மோடியும், அமித் ஷாவும் எந்த வெற்றியை குறி வைத்தார்களோ அந்த வெற்றியை ருசித்து விட்டார்கள். இப்போது இளைப்பாறுகிறார்கள்.

ராகுல் ஏன் பிரச்சாரத்துக்கு போகவில்லை?

ராகுல் ஏன் பிரச்சாரத்துக்கு போகவில்லை?

அதே நேரம் காங்கிரஸ் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள போராடும் நிலைமையில் இருந்தும்கூட ராகுல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்பது ஆச்சரியமே. 2009ல் உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலின்போது பிரச்சாரம் செய்த ராகுல்காந்தி, இப்போது பிரச்சாரத்துக்கு செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்வியும், கட்சிக்குள் எழுந்த விமர்சனங்களும் அவரை முடக்கி போட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

அடித்தளம் ஸ்ட்ராங்கா இருக்கு..

அடித்தளம் ஸ்ட்ராங்கா இருக்கு..

காந்தி குடும்பத்தார் பிரச்சாரத்துக்கு செல்லாத நிலையில் காங்கிரஸ் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது என்பது, தலைமையை மறுபரிசீலனை செய்ய சொல்லும் சமிக்ஞை என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானின் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் சச்சின் பைலட் தனது கட்சியை ஒன்பதே மாதங்களில், மிகப்பெரிய சரிவில் இருந்து மீட்டுள்ளார் என்பதை பார்க்கும்போது, காங்கிரசுக்கு அஸ்திவாரம் உறுதியாக உள்ளது, ஆனால் பில்டிங்தான் ஸ்டிராங் இல்லை என்பது தெரிகிறது. அதே நேரம் மோடி, அமித் ஷா ஆகிய பில்டிங் ஸ்டிராங்காக உள்ள பாஜகவுக்கு அடித்தளம் ஆட்டத்தில் இருப்பதும் புரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+