2014ல் அப்படியே பலித்த C-Voter கருத்து கணிப்பு.. ஜம்மு காஷ்மீரில் இந்த முறை எப்படி? காங்கிரஸ் ஹேப்பி
ஜம்மு காஷ்மீர்: 2014ல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை சி - வோட்டர் நிறுவனம் சரியாக கணித்து இருந்தது. அந்த வகையில் இந்த முறையும் சி -வோட்டர் கருத்து கணிப்பு மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அதன் கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும், பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியமும் அளிக்கும் வகையில் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக செயல்பட்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமான பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கி உள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் தேர்தலை பொறுத்தவரை மும்முனை போட்டி என்பது நிலவி வருகிறது. 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம்தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
Matrize: பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளும் தொங்கு சட்டசபை தான் அமையும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி Matrize கருத்து கணிப்பில் காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 11- 15 இடங்களிலும், பிடிபி கட்சி 28 இடங்களிலும், பாஜக 1 -25 இடங்களிலும், மற்றவர்கள் 0 - 1 இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் Dainik Bhaskar கருத்து கணிப்பில் காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 35 - 40 இடங்களிலும், பிடிபி 4- 7 இடங்களிலும், பாஜக 20 - 25 தொகுதிகளிலும், மற்றவர்கள் 12 - 16 தொகுதிகளிலும் வெல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே - சி வோட்டர்: அதேபோல் People Pulse கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 33 - 35 தொகுதிகளிலும், பிடிபி 7 - 11 இடங்களிலும், பாஜக 23- 27 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4- 5 இடங்களிலும் வெல்வார்கள் எனவும், Polls of Polls கருத்து கணிப்பில் 30 - 35இடங்களிலும், பிடிபி கட்சி 11 - 15 இடங்களிலும், பாஜக 24- 29 தொகுதிகளிலும், மற்றவர்கள் 6 - 8 இடங்களிலும் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-31 சீட்கள், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சிக்கு 11-15 சீட்கள், மக்கள் ஜனநாயக கட்சி 0-2 சீட், மற்றவர்கள் 0-1 சீட்டில் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gullistan News: Gullistan News கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 6 தொகுதிகளில் மட்டுமே வெல்லும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 28 முதல் 30 தொகுதிகளில் வெல்லும். பாஜக 28 முதல் 30 தொகுதிகளை கைப்பற்றும். மெகபூபாவின் பிடிபி கட்சி 8 முதல் 16 இடங்களில் தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட கடந்த 2014ம் ஆண்டில் காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பல நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் மிகச்சரியாக சி வோட்டர் நிறுவனம் தான் கணித்து இருந்தது. அதில் சி வோட்டர் மெகபூபாவின் முப்தியின் பிடிபி கட்சி 32 - 38 இடங்களிலும், பாஜக 27 - 33 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 8 - 14 இடங்களிலும், காங்கிரஸ் 4 - 10 இடங்களிலும் வெல்லும் என தெரிவித்தது. அதன்படி தேர்தல் முடிவின்போது பிடிபி கட்சி 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வென்றது. அதன்பிறகு பிடிபி கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
இதனால் இந்த முறையும் சி வோட்டர் கருத்து கணிப்பு என்பது அதிக கவனம் பெற்றுள்ளது. அதன்படி இந்த முறையும் இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் - தேசிய மநாாடு கட்சி 40 முதல் 48 இடங்களிலும், பாஜக 27 முதல் 32 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி 0-2 சீட், மற்றவர்கள் 0-1 சீட்டில் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications