ஜார்கண்டில் தொங்கு சட்டசபை.. காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள்- சி வோட்டர் அதிரடி எக்ஸிட் போல்
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும், அதேநேரம் காங்கிரஸ் கட்சி அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுக்கும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து எக்ஸிட் போல் ஏஜென்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாலை 6.30 மணிக்கு பிறகு ஒன்றொன்றாக வெளியாக தொடங்கியுள்ளன.
சி வோட்டர் என்பது பிரபல ஏஜென்சியாகும். இது நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி 35 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி 32 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3, ஏஜேஎஸ்யூ 5, பிறர் 6 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 41 தொகுதிகளில் வெல்ல வேண்டியது அவசியம் என்பதால், இங்கு தொங்கு சட்டசபை அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்பதால், ஆட்சி அமைக்கும் உரிமை அவர்களுக்கே, கிடைக்கும். பிற கட்சிகளை கூட்டணிக்குள் அழைத்துக் கொண்டு ஆட்சியமைக்க காங்கிரசால் முடியுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications