பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு.. உத்தரகாண்ட், கோவாவில் இழுபறி - சி வோட்டர் எக்ஸிட் போல்
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று சி வோட்டர் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 59 முதல் 67 இடங்களைக் கைப்பற்றும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே சம போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற உள்ளது. எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி 59 முதல் 67 இடங்களைக் கைப்பற்றும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
பாஜக மரண அடி
பாஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அகாலிதளம் பாஜக 5 முதல் 13 இடங்களையை பிடிக்கும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. ஜீரோ முதல் 3 இடங்களையே கைப்பற்றும் என்றும் சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
உத்தகாண்டில் பாஜக - காங்கிரஸ்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள 70 இடங்களில் இரு கட்சிகளுமே 29 முதல் 35 இடங்களைக் கைப்பற்றும் என்றும் சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. பிற கட்சிகள் 2 முதல் 9 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளன.
கோவா
கோவா மாநிலத்தில் பாஜக போராடி வெல்லும் என்றும் சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 15 முதல் 21 இடங்களைக் கைப்பற்றும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி 12 முதல் 18 இடங்களில் வெல்லும் என்று சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 முதல் 8 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அந்த எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications