Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே.வங்கத்தில் பாஜக எம்.பி.க்கு எதிராக இடதுசாரி மாணவர் சங்கத்தினர் போராட்டத்தால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பாஜக ராஜ்யசபா எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தாவை எஸ்.ஐ.எப். மாணவர் சங்கத்தினர் சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

CAA Protest: SFI protests against BJPs MP Swapan Dasgupta

மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக ஸ்வபன் தாஸ்குப்தா இன்று உரையாற்ற சென்றார். ஆனால் தாஸ்குப்தா, பல்கலைக் கழக வளாகத்துக்கு வந்த உடன் இடதுசாரி மாணவர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அவரை சூழ்ந்து கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அவரால் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தம்மை இடதுசாரி மாணவர்கள் கெரோ செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார் தாஸ்குப்தா.

இச்சம்பவத்துக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனை மிக கடுமையாக விமர்சித்த அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி, காங்கிரஸும் இடதுசாரிகளும் விளம்பரத்துக்காவே போராட்டங்களில் வன்முறைகளை தூண்டி விடுகின்றனர் என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+