ஆந்திரா பிரிகிறது- பிறக்கிறது தெலுங்கானா- ஹைதராபாத் பொது தலைநகர்- அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
10 வருடங்களுக்கு ஹைதராபாத் நகரம், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான முதல் முக்கிய நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டது.

இந்தியாவின் 29வது மாநிலம்
இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானா பிறக்கிறது. பத்து மாவட்டங்கள் இந்த மாநிலத்தில் இடம் பெற்றிருக்கும்.

அமைச்சர்கள் குழு அமைப்பு
அடுத்து தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான பணிகளைக் கவனிக்க அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்தியஉள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஷிண்டே மேலும் கூறுகையில், புதிய தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்தக் கூட்டம் நடந்தது.

10 வருடத்திற்கு ஹைதராபாத் தலைநகர்
ஹைதராபாத், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக பத்து வருடங்களுக்கு நீடிக்கும்.

மூன்று பகுதி மக்களின் நலனும், உரிமையும் பாதுகாக்கப்படும்
தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டதும், கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்படும் என்றார் ஷிண்டே.

ஆந்திராவுக்கு 13 மாவட்டங்கள்
தெலுங்கானா மாநிலத்தில் 10 மாவட்டங்களும், ஆந்திராவில் 13 மாவட்டங்களும் இனிமேல் இருக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications