தெலுங்கானா: டிச.3-ல் மத்திய அமைச்சரவை சிறப்புக் கூட்டம்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
தெலுங்கானா விவகாரம் குறித்து வரும் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அக் கூட்டம் நடைபெறும். தெலுங்கானா மாநில உருவாக்கம் தொடர்பான பல்வேறு சாத்தியக்கூறுகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வகையில் அமைச்சரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்றார்.
இதனிடையே தெலுங்கானா தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தலைமையில் அக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆந்திர பிரதேச மறு சீரமைப்பு மசோதா குறித்து அக்கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications