வந்துட்டார் மன்மோகன்சிங்... 'முட்டாள்தனமான' அவசர சட்டம் என்ன ஆகும்?

குற்ற வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களை பதவி பறிப்பில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பியது. ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பாரதிய ஜனதா தலைவர்கள் மனு கொடுத்தனர்.
அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அதிருப்தி ஏற்பட்டது. கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அவசர சட்டம் முட்டாள்தனம். அதை கிழித்தெறிய வேண்டும். அவசர சட்டம் கொண்டு வந்த அரசு நடவடிக்கை தவறானது என பகிரங்கமாக விமர்சித்தார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்துக்கு சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் அவசர சட்டம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அமைச்சரவையோ அவசர சட்டத்துக்கு ஆதரவாக உள்ளது. அவசர சட்டம் சரியானது என்பதை நியாயப்படுத்துகிறது. இதனால் ஜனாதிபதியிடம் இருந்து அவசர சட்டத்தை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை முடிவு எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
மேலும் அவசர சட்டம் தொடர்பாக ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை வரும் வரை காத்திருப்பது குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
இருப்பினும் ராகுல் காந்தியின் கடுமையான விமர்சனத்தின் தாக்கம் இன்று மாலை நடைபெற இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் எதிரொலிக்கலாம். அனேகமாக அவசர சட்டத்தை மத்திய அமைச்சரவை திரும்பப் பெறக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications