மமதா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை- தலைமை செயலாளருக்கு ஹைகோர்ட் கண்டனம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக மாஜி திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் முதலில் மமதா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசிநேரத்தில் மமதா பானர்ஜி தோல்வி அடைந்ததாகவும் சுவேந்து அதிகாரி வென்றதாகவும் அதிகாரிகள் அறிவித்தனர்.

வழக்கு தொடர்ந்த மமதா பானர்ஜி
இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. தேர்தல் அதிகாரிகள் முடிவுக்கு எதிராக மமதா பானர்ஜி வழக்கும் தொடர்ந்தார். சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வென்றதால் மமதா பானர்ஜி 3-வது முறையாக பதவி ஏற்றார்.

மமதாவுக்கு சிக்கல்
முதல்வராக பதவி ஏற்ற மமதா பானர்ஜி 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த நிலையில் பவானிப்பூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சோபன்தேப் சட்டோபத்யாய் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பவானிப்பூர் தொகுதி காலி இடமாக இருந்தது.

கடிதம் எழுதிய தலைமை செயலாளர்
அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுமா? என்கிற கேள்வியும் எழுந்தது. அப்படி பவானிப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறாவிட்டால் மமதா பானர்ஜி முதல்வராக நீடிப்பதில் சிக்கல் உருவாகும் என்கிற நிலைமை ஏற்பட்டது. இந்த பின்னணியில் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க அரசின் தலைமை செயலாளர், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.

நாளை மறுநாள் இடைத்தேர்தல்
இதன்பின்னர் பவானிப்பூர் சட்டசபை தொகுதிக்கு செப்டம்பர் 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, தலைமை செயலாளர் எழுதிய கடிதத்தை ஏற்று இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது சர்ச்சையானது. பவானிப்பூர் தொகுதியில் மமதா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார். பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் அனல் பறந்தது.

ஹைகோர்ட்டில் வழக்கு
இதனிடையே சயான் பானர்ஜி என்பவர் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தலைமை செயலாளர் கடிதம் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டிருந்தார். மேற்கு வங்க அரசியலில் மட்டுமல்ல தேசிய அளவிலும் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தடை விதிக்க மறுப்பும் கண்டனமும்
இவ்வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், பவானிப்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் திட்டமிட்டபடி வரும் 30-ந் தேதி நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட விரும்பவில்லை என கூறி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்தது. அதேநேரத்தில் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் கடிதம் எழுதியது கண்டனத்துக்குரியது என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் நாளை மறுநாள் திட்டமிட்டபடி பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications