அதெல்லாம், பேசும்போதே இணைப்பை துண்டிப்பதில்லை - வோடஃபோன் நிறுவனம் விளக்கம்
டெல்லி: செல்போனில் வாடிக்கையாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடையே தொலைபேசி அழைப்பை துண்டிப்பதில்லை என வோடஃபோன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இணைப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே கால அளவின் அடிப்படையில் அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே அழைப்பை துண்டிக்கும் நடைமுறையை பல செல்போன் நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன.

ஆனால் தாங்கள் அப்படிச் செய்வதில்லை என்று வோடஃபோன் கூறியுள்ளது. மோசமான சேவை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எந்த நிறுவனத்துக்கும் இல்லை என்று டெல்லியில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விட்டோரியா கலோ தெரிவித்தார்.
மேலும், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று வோஃபோன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நேரத்தில் வோடபோன் 4ஜியை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
முக்கிய சந்தையான மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்தியா முழுவதுமாக 4ஜி சேவை கொண்டு வரப்படும் என்றாலும் அதற்கான கால இலக்கு எதனையும் வோடஃபோன் அறிவிக்கவில்லை. சரியான கால நேரத்தில் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அழைப்பு துண்டிக்கப்படும் பிரச்னையை சரிசெய்வதில் தொலைபேசி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருவதாகக் கூறிய அவர், இந்தியாவில் புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட வோடஃபோன் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications