கடைசி கட்ட நாடாளுமன்ற தேர்தல்: பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம்தேதி தொடங்கி இம்மாதம் 12ம்தேதிவரை 9 கட்டங்களாக நடந்து வருகிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறும் நிலையில் நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

41 நாடாளுமன்ற தொகுதிகளில்...
ஏப்ரல் 7ம்தேதி தொடங்கி கடந்த புதன்கிழமை வரை 8 கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 9ம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை 12ம்தேதி நடைபெறுகிறது. பிகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலுள்ள 41 நாடாளுமன்ற தொகுதிகளில் அன்றையதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாரணாசி தொகுதிக்கும்...
பிகாரில் 6 நாடாளுமன்ற தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் 18 தொகுதிகளும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளும் 12ம்தேதி வாக்குப்பதிவை சந்திக்க உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 601 வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாரணாசி தொகுதிக்கும் அன்றுதான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை
மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் 9 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மே 16ம்தேதி அறிவிக்கப்படும். அன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மதியத்துக்குள் பெரும்பாலான தொகுதிகளுக்கான வெற்றி நிலவரம் தெரியவரும்.

கடந்து வந்த பாதை..
முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 7ம்தேதி நடைபெற்றது. அசாமிலுள்ள 5 தொகுதிகள் மற்றும் திரிபுராவின் ஒரு தொகுதி என அன்று மொத்தம் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
ஏப்ரல் 9ம்தேதி நடந்த 2ம்கட்ட தேர்தலில், அருணாச்சல பிரதேசம், மேகாலயா மாநிலங்களிலுள்ள தலா 2 தொகுதிகள், மணிப்பூர் மற்றும் நாகாலந்தில் தலா 1 தொகுதிகள் என மொத்தம், 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

கேரளாவில் வாக்குப்பதிவு
ஏப்ரல் 10ம்தேதி நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில், அந்தமான் நிகோபார், சண்டீகர், சட்டீஸ்கர், லட்சத்தீவு ஆகிய தலா 1 தொகுதிகள், கேரள மாநிலத்தின் மொத்தமுள்ள 20 தொகுதிகள், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10, பிகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களின் சில தொகுதிகள் என மொத்தம் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

121 தொகுதிகள்
12ம்தேதி நடந்த 4ம் கட்ட தேர்தலில் அசாமில் 3, கோவாவில் 2, சிக்கிம், திரிபுராவில் தலா 1 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 17ம்தேதி நடைபெற்ற 5ம் கட்ட தேர்தலில் பிகார், சட்டீஸ்கர், ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகள், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலுள்ள 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி..
ஏப்ரல் 24ம்தேதி நடைபெற்ற 6ம் கட்ட தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி, அசாம், பிகார், சட்டீஸ்கர், ஜம்முகாஷ்மீர், மத்திய பிரதேசம்,, உ.பி, மே.வங்கம் உட்பட்ட மாநிலங்களிலுள்ள 117 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

தெலுங்கானா
ஏப்ரல் 30ம்தேதி நடைபெற்ற 7ம் கட்ட வாக்குப்பதிவில் ஆந்திர மாநிலம் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள 17 தொகுதிகள், குஜராத்தின் 26 தொகுதிகள் உட்பட மொத்தம் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

சீமாந்திரா
மே 7ம்தேதி நடைபெற்ற 8ம் கட்ட வாக்குப்பதிவில் ஆந்திராவின் சீமாந்திரா பிராந்தியத்திலுள்ள 25 தொகுதிகள், உத்தரபிரதேசத்தின் 15 தொகுதிகள் உட்பட 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போதே ஒடிசா மற்றும் ஆந்திராவின் சீமாந்திரா, தெலுங்கானா பிராந்தியங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவும், தமிழகத்தின் ஆலந்தூர் உட்பட சில சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.

தீவிர பிரச்சாரம்
9ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நரேந்திர மோடி இன்று உ.பியின் காஜிபூர், மிசாப்பூர், பிகாரின் மோதிகரி, சிவான், கோபால்கஞ்ச் பகுதிகளில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, தியோரா, கோரக்பூர், சித்தார்த்நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பேரணி நடத்தினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications