15 வயது காதலியுடன் உல்லாசமாக இருந்த 17 வயது காதலன் கழுத்து நெரித்து கொலை!
லக்னொ: 15 வயது பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 17 வயது காதலனை கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண்ணின் அப்பா உள்ளிட்ட உறவினர்கள், தங்கள் பெண்ணுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்திலுள்ளது பார்டல் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் மக்கான்சிங். இவருக்கு சுக்வீர், சுனில், சுஷில் என்ற மகன்களும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகனுக்கு மட்டும் திருமணமாகிய நிலையில் மருமகள் ரிங்கியும் இதே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மக்கான்சிங் மகள், 17 வயதான ராகேஷ் சிங் என்ற வாலிபரை காதலித்துவந்துள்ளார். நேற்று காலையில் மக்கான் சிங் குடும்பத்தில் மகளை தவிர பிறர் வெளியே சென்றிருந்தனர். அப்போது காதலனை வீட்டுக்கு அழைத்த அந்த பெண், படுக்கையறையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக மக்கான்சிங் மற்றும் குடும்பத்தார் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் தங்களது குடும்ப பெண் இன்னொரு ஆணுடன் சல்லாபிப்பதை பார்த்த அவர்கள் ஆத்திரமடைந்து, வீட்டுக்குள் சென்று இருவரையும் அடித்து உதைத்துள்ளனர்.
கயிற்றால் ராகேஷ்சிங் கழுத்தை இறுக்கி கொலை செய்த குடும்பத்தார், தங்கள் குடும்பத்து பெண்ணின் வாயில் வயலுக்கு வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து ஊற்றியுள்ளனர். இதனால் அப்பெண் மயக்க நிலைக்கு சென்றார். இதனிடையே கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள், குடும்பத்தார் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த போலீசார், பெண்ணை மொராதாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு, ராகேஷ் சிங்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர். பெண்ணின் தந்தை, அண்ணன்கள், அண்ணி ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், இதை 'கவுரவ' கொலையாக போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் வழக்கின் ஒரே சாட்சியமான பாதிக்கப்பட்ட பெண் இயல்பு நிலைக்கு திரும்பினால்தான் விசாரணையில் வேகம் பிடிக்கும் என போலீசார் கூறினர். அதே நேரம், அந்த பெண் மிகவும் சீரியசான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications