காவிரி வழக்கு பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.. முதல்வர் பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார்
காவிரி வழக்கு குறித்து ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி: காவிரி வழக்கு குறித்து ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறது.

இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டார். காவிரி வழக்கு விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில் அவர் டெல்லி சென்றுள்ளார்.டெல்லியில் தமிழக அரசு வழக்கறிஞர் குழுவை சந்திக்க உள்ளார்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் காவிரி வழக்கு குறித்து விவாதம் நடக்க உள்ளது. இதில் வழங்கறிஞர்களுடன் முதல்வரின் முதன்மை செயலாளர் சாய் குமார், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications