For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசை நம்பினால் சொட்டு நீர் கூட கிடைக்காது - தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்

காவிரி பிரச்சனையில் மத்திய அரசை நம்பினால் சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி விவகாரம்..மத்திய அரசுக்கு மே 14-ந் தேதி வரை கால அவகாசம்- வீடியோ

    டெல்லி: காவிரி பிரச்சனையில் மத்திய அரசை நம்பினால் சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டு இருக்கிறது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இன்னும் வாரியம் அமைக்கவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ளது.

    Cauvery: Central government cheated us, TN argues in Supreme Court

    இன்றைய விசாரணையில் எப்போதும் போல தமிழகத்தை வஞ்சித்து மத்திய அரசு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது. கூடுதலாக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் எந்த கண்டிப்பும் தெரிவிக்காமல், மே 14ம் தேதி அன்று வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    இதற்கு மத்திய அரசு காரணம் கூறியுள்ளது. அதன்படி கர்நாடகாவில் தேர்தல் நடப்பதால், இந்த வரைவு அறிக்கையை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டு இருக்கிறது என்றுள்ளது. தேர்தல் முடிந்த பின் வரைவு அறிக்கையை உருவாக்கிவிடலாம் என்று கூறியுள்ளது.

    இதற்கு தமிழக அரசு எதிர்வாதம் செய்தது. தமிழக அரசு தனது வாதத்தில் ''மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளது. மத்திய அரசை நம்பினால் தண்ணீர் கிடைக்காது. அவர்களை நம்பி நாங்கள் காத்து இருந்தால் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தேர்தலை காரணம் காட்டி அரசு மக்களை வஞ்சிக்கிறது.'' என்றுள்ளது.

    English summary
    Cauvery: Central government have cheated us, TN argues in Supreme Court. TN arugues against central government in Supreme Court to form the CMB immediately.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X