For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம்- தமிழில் போனியாகாத நடிகை ராகினி ஆவேசம்! #TNNeedsKaveri

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: காவிரி ஆறு கர்நாடகாவுக்கே சொந்தம்.. எங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை... தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவதா? என ஆவேசமாக பேசியுள்ளார் நிமிர்ந்து நில் படத்தின் கதாநாயகி ராகினி திவேதி.

தமிழில் நிமிர்ந்து நில், அறியான் படங்களில் மட்டும் நடித்தவர் ராகினி. சீனியர் நடிகர்களுடன் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியடைந்து கர்நாடகாவுக்கே திரும்பிவிட்டார் ராகினி.

Cauvery is ours, says Actress Ragini Dwivedi

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு நீரை திறந்துவிட்டதற்கு கடந்த சில நாட்களாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் ராகினி. தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஆவேசமாக பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தமிழகத்துக்கு எதிராகப் போராட வருமாறு தூண்டிவிட்டிருந்தார்.

இன்றும் பெங்களூருவில் நடைபெற்ற கன்னட சினிமா நட்சத்திரங்களில் ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதில் பேசிய ராகினி, நரம்புகள் புடைக்க காவிரி எங்களுடையது... எங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை... அப்படி இருக்கும் போது தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுவதா? என ஆவேசமாக பேசினார்.

தமிழ் உட்பட 5 மொழிகளில் தயாராகும் 'அம்மா' என்ற திரைப்படத்தில் தாம் நடித்து வருவதை மறந்துவிட்டு இப்படி ஆவேசம் காட்டியிருக்கிறார் ராகினி. படம் வெளியாகும் போது எத்தனை எதிர்ப்புகளை சந்திக்கப் போகிறாரா?

English summary
Actress Ragini Dwivedi said that "Cauvery is ours, we will not let it go"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X