காவிரி வாரியம் அமைக்கக் கூடாது- பெங்களூரில் எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார்.
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம்அமைக்கக் கூடாது என்று அனைத்து கட்சி எம்பிக்களுடன் பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகம், கர்நாடகம், புதுவை, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீர் வளத் துறை செயலாளரிடம் தங்களது எதிர்ப்பை கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் இன்று அனைத்து கட்சி எம்பிக்களுடன் பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது காவிரி வாரியம் அமைக்க கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் காவிரி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் உள்ளிட்ட சட்டநிபுணர்களின் ஆலோசனையை ஏற்று முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications