காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு!
காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி தாமதப்படுத்திய மத்திய அரசு ஒரு வழியாக வரைவு திட்டத்தை தாக்கல் செய்தது.
இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பருவமழை தொடங்குவதற்குள்
இதனை அடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. மேலும், இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காலம் தாழ்த்தியது
ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்கி ஒரு வாரமாகியும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது.

அவமதிப்பு வழக்கு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறப்பட்ட நிலையில், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியானது.

அரசிதழில் வெளியீடு
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை சார்பில் அரசிதழில் வெளியிட பரிந்துரை கடிதம் தரப்பட்டுள்ளது.

இதிலும் லேட்
பருவமழை தொடங்கும் முன்பு அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கி ஒரு வாரம் கழித்து மத்திய அரசு அரசிதழில் காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications