காவிரி வழக்கு: 14ம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Recommended Video

டெல்லி: காவிரி வரைவு திட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வரைவு திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு பிப்ரவரி 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் இன்னும் வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட். அன்றைய தினம் மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி காவிரி திட்டம் குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டது.
நீர்வளத்துறை செயலாளரை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் வழக்கு வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications