காவிரி: உத்தரவை மதிக்காத கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காத்திருக்கிறது 'கச்சேரி'
டெல்லி: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடாததால் என்ன நடவடிக்கை பாயுமோ என கதிகலங்கிப் போயுள்ளது கர்நாடகா.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் தமிழகத்துக்கு 21-ந்தேதி முதல் 27-ம் தேதி வரை 6,000 கன அடி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.
ஆனால் இதன்படி காவிரி நீர் திறக்கப்படவில்லை. மேலும் கடந்த 23-ந் தேதி சட்டசபையை அவசரமாக கூட்டிய கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிறப்பு தீர் மானம் நிறைவேற்றியது.

இதுதான் தீர்மானம்
அதில், காவிரி நீர் கர்நாடகாவின் குடி நீருக்கு மட்டுமே. தமிழகத்தின் பாசனத்துக்கு திறந்துவிட இயலாது என கூறப்பட்டது. இதற்கு மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய நீர் வளத்துறை, சட்டத்துறை மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிக்கலை ஏற்படுத்திய சித்தராமையா
இந்த விவகாரம் நாடு முழு வதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் சித்தராமையா அரசியல் சாசன சிக்கலை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், நீதித்துறைக்கும் அரசியலமைப் புக்கும் இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

புதிய மனு
இந்த நிலையில் நேற்று கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. குடிநீருக்கே தண்ணீர் இல்லை; ஆகையால் டிசம்பர் மாதம் தரும் நீரோடு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுகிறோம் என கூறியிருக்கிறது. ஆனால் தமிழகமோ, உத்தரவை மதித்து காவிரி நீரை திறக்கும்வரை கர்நாடக அரசின் மனு மீது விசாரணை நடத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

இன்று 'சூடு'
உச்சநீதிமன்றத்தில் இன்று காவிரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடகாவை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டிக்கக் கூடும் என்று தெரிகிறது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications