காவிரி நதி நீர் பங்கீடு தீர்ப்பு: ஒரு மாதமாகியும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாத தமிழகம், கர்நாடகம்
காவிரி நதி நீர் பங்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழகமும், கர்நாடகமும் மறு சீராய்வு மனுவை இதுவரை தாக்கல் செய்யவில்லை.
டெல்லி: காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாதமாகியும் தமிழக அரசோ கர்நாடக அரசோ மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை.
200 ஆண்டுகளாக காவிரியில் நதி நீரை பங்கீடுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தனது இறுதி தீர்ப்பை அளித்தது. அது 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் தீர்ப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் தீர்ப்பு வெளியாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் தமிழகம், கர்நாடகம் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து கர்நாடகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் கதார்கி கூறுகையில், 200 ஆண்டுகள் வரலாற்று சிறப்புவாய்ந்த இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய 30 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கியும் கர்நாடகம் மற்றும் தமிழகம் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை. இப்போதும் ஒன்று கெட்டுவிடவில்லை, காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டும் மறுசீராய்வை தாக்கல் செய்யலாம். ஆனால் அது போல் நடப்பது சாத்தியமில்லை.
தற்போது கேரளம் மட்டும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கேரள அரசு முக்கியமான ஒன்று இல்லை. எனவே இந்த மனுவுக்கு அனுமதி கிடைத்தாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 30 டிஎம்சி தண்ணீரை திருப்பிவிட அனுமதி கோரியுள்ளது கேரள அரசு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications