கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி! தண்டனை எப்போது தெரியுமா?
ராஞ்சி: மாட்டு தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 22 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் விடுதலை செய்யப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தண்டனை விவரம் ஜன. 3ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இது ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பீகாரில் கடந்த 1991 முதல் 1995 வரையில் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது கால்நடை தீவனம் வாங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. தியோஹர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் உள்ளிட்ட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் வழக்கில் சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததற்காக 2013ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவிற்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதேபோல், இந்த வழக்கில் லாலு பிரசாத் மீது மேலும் 3 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்த வழக்கில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் தீர்ப்பளித்தார். முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சென்றிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, 38 பேருக்கு எதிராக கடந்த 1997ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில், 11 பேர் இறந்துவிட்டனர். 3 பேர் அரசு தரப்பு சாட்சியாக மாறிய நிலையில், 2 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டனர். இந்த வழக்கைத் தவிர, லாலு பிரசாதுக்கு எதிராக மேலும் 3 கால்நடைத் தீவன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications