For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் சிபிஐ அதிரடி ரெய்டு.. ரூ.266 கோடி பணம் சிக்கியது

கேரளாவில் கூட்டுறவு வங்கிகளில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ரூ.266 கோடி சிக்கியுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம், மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடத்திய சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் கணக்கில் வராத ரூ.266 கோடி பணத்தை கைப்பற்றியுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்படுவதாக புகார்கள் உள்ள நிலையில் இந்த ரெய்டுகள் நடந்துள்ளன.

CBI-ED officials raid cooperative banks in Kerala

நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்துதான் விசாரணை நடந்துள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கோழிக்கோடு மற்றும் கண்ணூரிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் சோதனை நடத்தியிருந்த நிலையில் இப்போது சிபிஐ சோதனையும் நடைபெற்றுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Enforcement Directorate and CBI officials raided offices of select cooperative banks in different parts of the State on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X