மோடியின் வலதுகரம் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி திடீர் 'டிரான்ஸ்பர்'
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் 'வலதுகரம்' பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அமித்ஷா மீதான துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதி 2006ஆம் ஆண்டு குஜராத் போலீஸால் நடத்தப்பட்ட மற்றொரு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர்கள் போலியாக நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்த அமித் ஷா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மே 9ந் தேதி நீதிபதி ஜே.டி. உத்பத் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது அமித்ஷா ஆஜராகவில்லை. அத்துடன் வழக்கில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அமித் ஷாவின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையில் ஆஜராகாமால் இருக்க எப்போதும் எந்தவித காரணமுமின்றி மனு தாக்கல் செய்து வருகிறீர்கள் என்று சாடினார். அத்துடன் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி உத்பத்.
இந்த நிலையில்தான் அமித் ஷா மீதான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உத்பத் திடீரென நேற்று புனேவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications